SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பழைய டோனி திரும்ப வந்துட்டார்... கோஹ்லி உற்சாகம்

2019-01-17@ 00:36:55

அடுலெய்டு ஒருநாள் போட்டியில் டோனியின் பழைய அதிரடியை பார்க்க முடிந்தது. அவர் மீண்டும் பார்முக்கு திரும்பிவிட்டார் என்று கேப்டன் கோஹ்லி பாராட்டி உள்ளார். இது குறித்து கோஹ்லி கூறியதாவது:இந்திய அணியில் டோனி இடம் பெற வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடிலெய்டில் அவர் தனது பழைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்திவிட்டார். ஆட்டத்தின் போக்கை அவர் மிகத் துல்லியமாகக் கணிக்கிறார். கடைசி வரை நம்பிக்கையுடன் விளையாடுவதுடன், தேவையான நேரத்தில் மிகப் பிரமாதமான ஷாட்களை விளையாடி வெற்றியை வசப்படுத்தும் அவரது பாணியில் எந்த மாற்றமும் இல்லை. அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். நான் பேட்டிங் செய்தபோது ரன் குவிக்க நல்ல வாய்ப்புக்காக பொறுமையாக காத்திருந்தேன்.

ரன் வேகத்தை அதிகரிக்க இரண்டு அல்லது மூன்று ஓவர் போதும் என்ற நம்பிக்கை வீணாகவில்லை. அதே சமயம் மிகக் கடினமான நாளாக இது இருந்தது. வியர்வையில் எனது பேன்ட் முழுவதும் உப்பு பூத்துவிட்டது. டோனியும் சோர்வடைந்துவிட்டார். முழுமையாக 50 ஓவர் பீல்டிங் செய்த பிறகு பேட்டிங்கும் செய்வது மிகக் கடினம். புவனேஷ்வர் கடைசி கட்ட ஓவர்களை சிறப்பாக வீசி ஆஸி. ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். ஷான், மேக்ஸ்வெல் இருவரும் அதிரடியாக விளையாடியபோது மிகப் பெரிய ஸ்கோரை எடுத்துவிடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அவர்கள் இருவரையும் அடுத்தடுத்து அவுட்டாக்கி அசத்திவிட்டார். ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கருக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றியும் ஆலோசித்தோம். ஐந்து பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் வியூகம் கை கொடுப்பது ஒரு கேப்டனாக மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • TokyoOlympicTorch

  2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

 • newzealandattack

  நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

 • PhilipinesWhalePlastic

  இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

 • StalinElectionCampaign19

  தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் மு.க.ஸ்டாலின்..தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் அலைகடலென திரண்ட மக்கள்: புகைப்படங்கள்

 • NorwayUnderRestaurant

  ஐரோப்பாவின் முதல் கடலுக்கடியில் இயங்கும் உணவகம்...நார்வே நாட்டில் துவக்கம்: பிரம்மிப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்