SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெரினாவில் செல்போன் பறித்த குதிரையோட்டிகள் 2 பேர் கைது

2019-01-15@ 00:24:13

சென்னை: சென்னை கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த வரபிரசாத் (18), கடந்த சனிக்கிழமை மெரினா கடற்கரைக்கு நண்பர்களுடன் வந்தபோது, 2 வாலிபர்கள் அவரை மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.  விசாரணையில், மெரினா கடற்கரையில் குதிரை சவாரி தொழில் செய்து வரும் மாட்டங்குப்பத்தை சேர்ந்த காகிதம் (எ) கணேஷ் (22), பார்த்திபன் (20) ஆகியோர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை போலீசார்  கைது செய்தனர். மற்றொரு சம்பவம்:  தி.நகரை சேர்ந்த கோகுல் (14) என்ற சிறுவன்,  ேநற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு திரைப்படம்  பார்க்க வந்துள்ளான். அங்கு தனது செல்போனில் செல்பி எடுத்தபோது, 40   வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், கோகுலிடம், தான் போலீஸ் என்றும், வணிக வளாகத்திற்கு வரும் இளம்பெண்களை ரகசியமாக படம்  எடுக்கிறாயா என்று கேட்டு மிரட்டி உள்ளார்.

 பின்னர்  அந்த நபர், கோகுலிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு, ‘காவல்  நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள்,’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து கோகுல் வடபழனி காவல் நிலையத்தில் விசாரித்த  போது, செல்ேபானை பறித்து சென்றவர் போலீஸ் இல்லை என தெரிந்தது. சிசிடிவி கேமரா  பதிவுகளை பெற்று, செல்போன் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-05-2020

    23-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்