SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை விமான நிலையத்தில் 10 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல்: கேரள ஆசாமி கைது

2019-01-15@ 00:24:09

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தில் ₹10 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, கேரளாவை சேர்ந்த ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னை வரும் ஏர் இண்டியா விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள்  தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, கேரளாவை சேர்ந்த சுரேஷ்குமார் (42), என்பவர் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக சென்னை வந்தார். பொதுவாக சர்வதேச விமானத்தில் பயணம் செய்யும் உள் நாட்டு பயணிகளை சுங்கத்துறை சோதனைக்கு உட்படுத்துவதில்லை. சந்தேகப்படும் நபர்களை மட்டும் சோதனை செய்வது வழக்கம். இந்நிலையில், தனது உடமைகளை  எடுத்துக் கொண்டு கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்ற சுரேஷ்குமார் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனால், அவரை மடக்கி விசாரித்தனர். அப்போது சுரேஷ்குமார், ‘‘நான் உள்நாட்டு பயணி, திருவனந்தபுரத்தில் தான் விமானத்தில் ஏறினேன். வேண்டுமென்றால் என்னுடைய டிக்கெட்டை பாருங்கள்’’, என்று டிக்கெட்டை  காட்டினார். ஆனால், சந்தேகம் தீராத அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, சோதனை செய்தபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில் காகிதத்தில் சுற்றப்பட்ட 2 தங்க கட்டிகள் இருந்தன. அதன் மொத்த எடை 300  கிராம். அதன் சர்வதேச மதிப்பு ₹10 லட்சம். விசாரணையில், சுரேஷ்குமார் திருவனந்தபுரத்தில் விமானத்தில் ஏறியதும் அருகில் அமர்ந்திருந்த ஆசாமி நைசாக பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர், தன்னிடம் ஒரு பொருள் உள்ளது. அதை சென்னை விமான நிலையத்தில்  இறங்கியதும் வெளியில் கொண்டு வந்து கொடுத்தால் ₹2 ஆயிரம் தருகிறேன் என்று கூறியதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு அதை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.  உடனே அதிகாரிகள் சுரேஷ்குமார், இருக்கையின் அருகில்  அமர்ந்திருந்த ஆசாமியை தேடியபோது அவர் எஸ்கேப் ஆனது தெரிந்தது. இதையடுத்து, சுரேஷ்குமாரை கைது செய்த அதிகாரிகள் சிசிடிவி கேமராகாட்சியை வைத்து கடத்தல் ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

₹11.5 லட்சம் கரன்சி சிக்கியது
சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில், பயணிக்க வந்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது,  சென்னையை சேர்ந்த அகமது (26), சிங்கப்பூருக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் செல்ல வந்திருந்தார். அவரது கைப்பையை சோதனை செய்தபோது அதில் கட்டுக்கட்டாக அமெரிக்க கரன்சி இருந்தது தெரியவந்தது. அதன் இந்திய  மதிப்பு ₹11.5 லட்சம்.விசாரணையில், ஹவாலா பணம் என தெரியவந்தது. இதையடுத்து சுங்க அதிகாரிகள், அகமதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்