SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீஸ் போல் நடித்து சிறுவனிடம் செல்போன் பறிப்பு

2019-01-15@ 00:24:06

சென்னை: தி.நகரை சேர்ந்த கோகுல் (14) என்ற சிறுவன், ேநற்று முன்தினம் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு திரைப்படம் பார்க்க வந்துள்ளான். அங்கு, தனது செல்போனில் செல்பி எடுத்துள்ளார். அப்போது 40  வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கோகுலிடம், தான் போலீஸ் என்று கூறி அறிமுகமானார். நீ வணிக வளாகத்திற்கு வரும் இளம்பெண்களை ரகசியமாக படம் எடுக்கிறாயா என்று கேட்டுள்ளார். அதற்கு கோகுல் மறுப்பு  தெரிவித்துள்ளார்.

பின்னர் அந்த நபர், கோகுலிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு வந்து வாங்கிக் கொள் என்று கூறிவிட்டு சென்று விட்டார். உடனே வடபழனி காவல் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து  கோகுல் தெரிவித்துள்ளான். அப்போது, போலீஸ் எனக்கூறி மர்மஆசாமி செல்போனை பறித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து காவல்நிலையத்தில் கோகுல் புகார் அளித்தான். போலீசார் வழக்கு பதிவு செய்து வடபழனி வணிக  வளாகத்தின் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தப்பி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்