SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீசனுக்கு 3 மாதத்திற்கு முன்னதாகவே பெரம்பலூரில் குவிந்த தர்பூசணி பழங்கள்

2019-01-14@ 12:45:24

பெரம்பலூர்: சீசன் தொடங்க 3மாதத்திற்கு முன்னதாகவே  பெரம்பலூரில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்கள் தான் 100 டிகிரிக்கும் மேலாக வெயில் கொளுத்தும் சூரிய வெப்பத்தின் தாக்கத்தால் திணறடிக்கும் கோடைகால மாதங்களாகக் கருதப்பட்டு வருகிறது. இம்மாதங்களில் வெப்பத்தின் சூட்டைத் தணிக்க ஏதுவாக குளிர்ச்சியான பொரு ட்களை, பானங்களை சாப்பிடுவர். இதற்காக  ரசாயன குளிர்பா னங்களையே பெரிதும் அருந்தி வந்த மக்கள் காலப்போக்கில் விழிப்புணர்வு பெற்று இயற்கை நமக்குத் தந்துள்ள வழிகளில் இளநீர், நொங்கு, எலுமிச்சை சர்பத், மோர் போன்றவற்றை  குடித்து கொண்டு சமாளித்து வருகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக அளவில் விளைச்சல் அதிகரித்து வருவதால் தர்பூசணிப் பழங்கள் முக்கிய இடத்தில் உள்ளன. இவையும் ஏப்ரல், மே மாதங்களில் தான் விற்பனைக் காகக் கொண்டு வந்து குவிக்கப்படும். இந்நிலையில் எதிர்பாராத விதமாக கொட்டும் பனியில் காலையில் மக்கள் திண்டாடி வரும் சூழலில் சீசனுக்கு 3மாதங்களுக்கு முன்பாகவே பெரம்பலூரில் தர்பூசணிப் பழங்கள் விற்பனை க்காகக் கொண்டு வந்து குவிக்கபட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் இருந்து  கொண்டு வரப்பட்டுள்ளன. இப்ப ழங்கள் கிலோ ரூ15க்கு விற்கப்படுகிறது. இதன்படி ஒருபழம் எடைக்குத் தகுந்தபடி ரூ20முதல் ரூ45வரை விலை வைத்து விற்கப்பட்டு வருகிறது. பனிப்பொழிவு ஏற்பட்டாலும் மதியநேர வெயிலுக்கு இதமாக குவிந்துள்ள தர்பூசணிப் பழங் களை பெரம்பலூர் நகரவாசிகள் வாங்கி சீசனுக்கு முன்பே வரவேற்கத் தொடங்கிவிட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்