SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மைனஸ் டிகிரியை தொட்ட வெப்பநிலை: வரலாறு காணாத உறைபனியால் மக்கள் பாதிப்பு

2019-01-14@ 12:24:23

கொடைக்கானல்: கொடைக்கானலில் 15 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டுள்ளது. அதமட்டுமல்லாது, கடும் உறைபனி நிலவுவதன் காரணமாக இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் சில ஆண்டுகளாகப் போதிய மழை பெய்யாததால் வெப்பநிலை ஒற்றை இலக்கத்தை தொடுவதே பெரும்பாடாக இருந்தது. கடந்த ஆண்டுகளில் அதிகபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வரை குறைவான வெப்பநிலை பதிவானது. இந்த ஆண்டும் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை போதிய அளவு பெய்யாமல் ஏமாற்றியது. இருந்தபோதும் திடீரென வந்த கஜா புயலால் ஒரே நாளில் கொடைக்கானல் மலைப் பகுதியில் பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து, கொடைக்கானலில் வழக்கமாக டிசம்பர் மாதத்திலேயே முடிந்துவிடும் உறைபனி காலம், தற்போது வரை நீடித்து வருகிறது. எனவே, கொடைக்கானல் நகரில் வெப்பநிலை மிகவும் குறைந்து நேற்று நள்ளிரவு 4 டிகிரி செல்சியசை எட்டியது.

மேல்மலைப் பகுதியான மன்னவனூர், கவுஞ்சி உள்ளிட்ட கொடைக்கானல் நகரைவிட உயரமான பகுதிகளில் வெப்பநிலை மேலும் குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில், கடல்மட்டத்தில் இருந்து 7000 அடி உயரத்தில் உள்ள கொடைக்கானலின் கோணளாறு பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை தற்போது, மைனஸ் டிகிரியை தொட்டுள்ளது. இந்த கோணளாறு பகுதியானது ஆசியாவிலேயே இரண்டாவது நன்னீர் ஏரியாக திகழ்கிறது. மேலும் இந்த ஏரியானது அதிக சதுப்பு நிலத்தை கொண்டது என்ற பெருமையையும் பெற்றுள்ளது. முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய இந்த ஏரி மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஒருசில பகுதிகளில் மைனஸ் டிகிரியுடன் உறை பனி நிலவி வருகிறது. இந்த உறைபனியானது இன்னும் சில நாட்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், உறைபனி காரணமாக ஆரஞ்சு, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட மலைப்பயிர்கள் கருகும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மேலும், சுற்றுலாப் பயணிகள் வருகையும் வெகுவாகக் குறைந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்