SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராமநாதபுரத்தில் அதானி குழுமத்தின் சூரிய மின்னாற்றால் நிலையத்தால் குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் பாதிப்பு

2019-01-14@ 10:18:14

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி குழுமத்திற்கு சொந்தமான 648 மெகாவாட் சூரிய மின்னாற்றால் நிலையம் செயல்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட ஊர்களில் 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் நிலையத்தில் உள்ள சூரிய மின் தகடுகளில் படியும் தூசியை கழுவி சுத்தம் செய்ய நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இயல்பாகவே வறண்ட மாவட்டமான ராமநாதபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டதால் கமுதி வட்டாரத்தில் நிலத்தடி நீர் மட்டம் அதிக ஆழத்திற்கு சென்று விட்டது. இத்தகைய சூழலில் அதானி குழுமத்திற்கு சொந்தமான சூரிய மின்னாற்றால் நிலையத்திற்கு தேவையான தண்ணீர் நாள்தோறும் நிலத்தில் இருந்து ஆழ்துழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படுகிறது.

இதனால் குடிநீருக்கு திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர். நிலத்தை கொடுத்துவிட்டு எவ்வித வசதியுமின்றி துண்பப்படும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அதானி நிறுவனம் உறுதியளித்திருந்த நிலையில், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், ராமநாதபுரம் மாவட்டத்தின் நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்