SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலி சான்றிதழ் கொடுத்து 108ல் வேலைக்கு சேர்ந்த பெண்ணுக்கு போலீஸ் வலை

2019-01-14@ 06:13:18

சென்னை: போலி மருத்துவப் படிப்பு சான்று வழங்கி சென்னையில் உள்ள 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் பணிக்குச் சேர்ந்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில் அவசர 108 ஆம்புலன்ஸ் சேவை மையம் இயங்கிவருகிறது. இதில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரச்செல் ஜெனிபர், என்பவர் போலி மருத்துவச் சான்றிதழை சமர்பித்து வேலைக்கு சேர்ந்துள்ளார். இதற்கிடையில் சான்றிதழ்களை சரிபார்க்கும் போது அவர் அளித்த சான்றிதழ்கள் போலியானவை என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர் வேலைக்கு சேர்ந்த போது கொடுக்கப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர், இது குறித்து 108 ஊர்தி நிர்வாகம் சார்பில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணை தேடிவருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்