SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்க முடிவு

2019-01-14@ 04:53:21

* புதிதாக 6 திட்டங்கள் கொண்டு வர திட்டம்
* பிப்ரவரி முதல் பணிகளை தொடங்க முடிவு

சென்னை,  ஜன. 14: சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்காக கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக விநியோகிக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புதிதாக 6 திட்டங்கள் கொண்டு வர திட்ட மிடப்பட்டுள்ளது என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர மக்களின் குடிநீர் ேதவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் உள்ளன. 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் வடகிழக்கு பருவமழையின் போது நீர் சேமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீராக வழங்கப்படுகிறது.

 இந்நிலையில், கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை சராசரி அளவை காட்டிலும் 55 சதவீதம் குறைவாகவே பெய்தது. இதனால், 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட 4 ஏரிகளில் 1.2 டிஎம்சி நீர் மட்டுமே தற்போது உள்ளது. சென்னை மாநகரில் நாள் ஒன்றுக்கு 80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், பற்றாக்குறை காரணமாக தற்போது 50 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது  இந்த ஆண்டு சற்று அதிக நீர் இருப்பு உள்ளது. அதாவது, 1.2 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. இதை கணக்கில் எடுத்துக்கொண்டால் கூட இன்னும் ஒன்றரை மாதத்திற்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை குடிநீர் வடிகால் வாரியம் கடந்த ஆண்டு நீர்ப்பற்றாக்குறையை சமாளிக்க குவாரிகளில் இருந்து நீர் எடுத்ததைப் போன்று, இந்த ஆண்டும் நீர் எடுக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், கழிவுநீரை சுத்திகரித்து குடிநீராக வழங்கவும் குடிநீர் வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னையில் நாள் ஒன்றிற்கு 55  எம்.எல்.டி கழிவு நீர் உருவாகிறது. இந்த கழிவுநீரில் 1 சதவிகிதம்  மட்டும்தான் திடமான கழிவு. இந்த திடக்கழிவு மற்றும் மாசுக்களை மூன்றாம்  நிலை கழிவுநீர் சுத்திகரிப்பின் மூலம் குடிக்கும் தரத்திற்கு சுத்தப்படுத்த  முடியும்.  நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றிற்கு 117 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையத்திற்கு அருகில் 10 எம்.எல்.டி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, குடிக்கும் தரத்திற்கு கழிவுநீரை மாற்றி ஆறரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து போரூர் ஏரியில் கொண்டு கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளொன்றிற்கு 126 எம்.எல்.டி கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. இந்த நிலையத்திற்கு அருகில் 10எம்.எல்.டி திறன் கொண்ட மூன்றாம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிக்கும் தரத்திற்கு கழிவுநீரை மாற்றி மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் அமைத்து பெருங்குடி ஏரியில் கொண்டு கலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் ரெட்டை ஏரியில் 10 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை  மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கொளத்தூர் குடிநீர் வழங்கல் நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பெரும்பாக்கம் ஏரியில் 10 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை 7 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சோழிங்கநல்லூர் குடிநீர் வழங்கல் நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அம்பத்தூருக்கு அருகில் இருக்கும் அயனம்பாக்கம் ஏரியில் 10 எம்.எல்.டி திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையம் அமைத்து அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை 5.6 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் முகப்பேர் குடிநீர் வழங்கல் நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

குன்றத்தூரில் இருக்கும் எருமையூர் கல்குவாரியில்  இருந்து 10 எம்.எல்.டி நீரை குழாய் மூலம்  7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆறு திட்டங்களையும்  நடப்பாண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ₹116 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு ஜனவரி 23ம் தேதி ஒப்பந்த நிறுவனம் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

குவாரியில் இருந்து 30 கோடி லிட்டர்
குன்றத்தூரில் உள்ள சிக்கராயபுரம் கல் குவாரியில் கடந்த ஆண்டு நீர் எடுக்க போடப்பட்ட குழாய்களை மீண்டும் சீரமைப்பு  செய்யத் தொடங்கியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் இருந்து நாள் ஒன்றிக்கு 30  கோடி லிட்டர் எடுக்க குடிநீர் வடிகால் வாரியம் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி  பெருங்குடி மற்றும் நெசப்பாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 10  எம்.எல்.டி திறன் கொண்ட 3ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து  கழிவுநீரை குடிநீராக பயன்படுத்தும் தரத்திற்கு சுத்தமாக்கி அருகில் உள்ள  ஏரிகளில் குழாய் மூலம் எடுத்துச் சென்று விடுவதற்கு சென்னை குடிநீர்  வாரியம் திட்டமிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்