SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் விலைக்கு மதுவிற்றால் ₹20 ஆயிரம் அபராதம்: ஊழியர்களுக்கு டாஸ்மாக் அதிகாரி எச்சரிக்கை

2019-01-14@ 00:00:33

சென்னை: பொங்கல் பண்டிகையின்போது டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைவைத்து மதுவிற்றால் ₹20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.  டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் உள்ள டாஸ்மாக் கடைகளில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலான கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்வதாக டாஸ்மாக்  நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.  இதனால், அரசுக்கு மாதம் தோறும் ₹200 கோடி அளவில் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் விற்பனையை  ஒழுங்குபடுத்தவும், இதுபோன்ற ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் டாஸ்மாக் நிர்வாகம் முடிவெடுத்தது.  

அதன்படி, கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் ஊழியர்கள் மற்றும் கடை மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில், டாஸ்மாக் கடைகளில்  பாட்டிலுக்கு 1 ரூபாய் கூடுதலாக விற்றால் ₹1000 அபராதமும், ₹10 வரையில் அதிக விலை விற்றால் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இந்த குழு கூடுதல்  விலை  விற்பவர்கள் மீது தொடர் நடவடிக்கை எடுத்து வந்தது.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்கு டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ₹750 கோடி வரையில் மதுவிற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டிய விடுமுறை தினங்களில்  டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யும் ஊழியர்களை கண்காணிக்க மாவட்டத்திற்கு 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து விற்பனை  செய்யும் ஊழியர்களிடம் ₹20 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை ைவைத்து மதுவிற்பனை செய்ததாக இதுவரையில் 1,250 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், பொங்கல்  பண்டிகையின்போது கூடுதல் விலைவைத்து மதுவிற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாவட்டம்தோறும் 5 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை வைத்து விற்பனை செய்தால் அபராத  தொகை இரட்டிப்பாகும். குறிப்பாக ₹20 ஆயிரம் வரையில் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வை மேற்கொண்டு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு கூறினார்.



மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்