SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி விவசாயிகள் போராட்டம்: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தல்

2019-01-11@ 17:13:04

நாகை: நாகை மாவட்டம் திருமருகலில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வலியுறுத்தி விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும், விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில், நெல் கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது. இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராம பகுதிகளில் உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் திருமருகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் இந்த ஆண்டும் திறக்கப்படாததால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மூட்டைகளை நெல் கொள்முதல் நிலையம் முன்பு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருமருகல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்லை திருமருகல் சந்தைப்பேட்டை சாலையில் கொட்டி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசார் முன்னிலையில் விவசாயி ஒருவர் மண்ணெண்னை கேனை எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரிடம் இருந்து மண்ணெண்ணை கேனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நெல் கொள்முதல் நிலையம் திறப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் கொள்முதல் செய்யாவிட்டால் ஆட்சியை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • china23

    சீனாவின் வுலியன் அருங்காட்சியத்தில் நடைபெற்ற கலாச்சார நினைவுச் சின்னங்களின் கண்காட்சி: புகைப்படங்கள்

  • 23-08-2019

    23-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்