SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் பாஜக நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் நல்லது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

2019-01-11@ 16:43:32

சென்னை: தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலரப்போவது இல்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், தேசிய கட்சிகள் கூட்டணிக்கு ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் நேற்று கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எங்கள் கூட்டணியில் இருந்து வெளியே சென்றவர்களும் எங்களுடன் இணையலாம் என கூறினார். இதனையடுத்து, ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என்றும், தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் இல்லை என்றும், அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் திமுக எக்காரணத்திலும் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என கூறினார்.

மேலும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் கட்சிகளுடன் மட்டுமே அதிமுக கூட்டணி வைக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழகத்தில் தாமரை ஒருபோதும் மலரப்போவது இல்லை என கூறி தமிழிசையின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும், தமிழகத்தில் பாஜக ஏதாவது ஒரு தொகுதியில் டெபாசிட் அல்லது நோட்டாவை விட அதிக வாக்குகள் பெற்றால் நல்லது என கூறியுள்ளார் அவர், அதிமுக ஆட்சி குறித்து தமிழிசை சான்றிதழ் அளிக்க தேவையில்லை என கூறியுள்ளார். முன்னதாக, தொழில்நுட்ப ரீதியில் மலரும் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கருத்துக்கு, இயற்கையாக மலர்ந்தால் தான் மலருக்கு மரியாதை என்று தெரிவித்திருந்தார். இவ்வாறு தொடர்ந்து எதிர் கருத்துகள் எழும்பி வருவதால், பாஜகவினர் கடும் கலக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-03-2019

    20-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • arjithcrpf

    சிஆர்பிஎப் படையின் 80வது ஆண்டு நினைவு அணிவகுப்பு நிகழ்ச்சியில் அஜித் தோவல் பங்கேற்பு

  • catyoga

    பூனைகளுடன் சேர்ந்து யோகாசனம் செய்யும் பெண்கள் : நியூயார்கில் விநோதம்

  • lebanonwar

    லெபனானில் போரில் சிதைந்த உலோகங்களை பயன்படுத்தி பல்வேறு சிற்பங்கள் வடிவமைப்பு

  • chesspune

    ஷிக்சன் மகரிஷி சிவாஜிராவ் நினைவு தினத்தை முன்னிட்டு புனேவில் சிறுவர்களுக்கு செஸ் போட்டி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்