SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு வினையனாது : சிறுத்தைப் பட வசனத்தை டிக் டாக் டப்ஸ்மாஷ் செய்த 4 இளைஞர்கள் கைது

2019-01-11@ 10:11:36

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காவல் நிலையத்தை அவமதிக்கும் வகையில் டிக் டாக் வீடியோ பதிவு செய்த இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பசுபதி பாண்டியன் நினைவு தினத்திற்கு வாகனத்தில் செல்ல அனுமதி கேட்டு சிவகாசி பள்ளிப்பட்டியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது காவல் நிலைய வாசலில் காலை வைக்கும் போது விளையாட்டு தனமாக  சிறுத்தை திரைப்படத்தில் வரும் வசனத்தை பயன்படுத்தி காவல் துறையினரையும் காவல் நிலையத்தையும் அனுமதிக்கும் வகையில் டிக் டாக் வீடியோ பதிவு செய்தனர்.

டிக் டாக் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து காவல் துறையினர் வீடியோவை பதிவுச் செய்த ஈஸ்வரன், தங்கேஸ்வரன்,முருகேசன் மற்றும் குருமதன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். உயரதிகாரிகளை அவதூறாக பேசியது தகாதா வார்த்தையை பயன்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இடம், பொருள் தெரியாமல் இளைஞர்கள் விளையாட்டாக செய்தது தற்போது வினையாகியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்