SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் இளம்பெண்ணின் இதயத்துடிப்பை 72 மணி நேரம் நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை

2019-01-11@ 09:12:45

புஜியான்: சீனாவில் இளம்பெண் ஒருவருக்கு 72 மணி நேரம் இதயத்துடிப்பை நிறுத்தி அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் 26 வயதான மாணவி ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. இறுதியில் இதயத்தில் உள்ள குழாய் ஒன்றினை துண்டித்து பின் மீண்டும் இணைக்க மருத்துவர்கள் திட்டமிட்டனர். இதற்காக கிட்டத்தட்ட 72 மணி நேரம் அந்தப் பெண்ணின் இதயத்துடிப்பை நிறுத்தி வைத்து அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது அந்தப் பெண் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்