SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

22ம் தேதியுடன் காலாவதியாகும் நிலையில் முத்தலாக் அவசர சட்டம் மீண்டும் பிறப்பிக்க ஒப்புதல்

2019-01-11@ 00:43:36

புதுடெல்லி: முத்தலாக் அவசர சட்டம் வரும் 22ம் தேதியுடன் காலாவதியாக உள்ள நிலையில் மீண்டும் இந்த அவசரச் சட்டத்தை பிறப்பிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களை அவர்களின் கணவன் ஒரே நேரத்தில் மூன்று முறை ‘தலாக்’ சொல்லி, விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதற்கான சட்டத்தை கொண்டு வரும்படி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்தது. அதன்படி, மத்திய அரசு கொண்டு வந்த ‘முத்தலாக் தடை மசோதா’ ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்படால் உள்ளது. இந்த தடையை விதிப்பதற்கான அவசர சட்டத்தை கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய அரசு பிறப்பித்தது. அரசியல் சட்டத்தின்படி, இந்த அவசர சட்டத்தை 6 மாதங்களுக்குள் அல்லது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய 42 நாட்களுக்குள் அவையில் தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால், அது காலாவதியாகி விடும்.

இந்நிலையில், திருத்தம் செய்யப்பட்ட முத்தலாக் மசோதா, சமீபத்தில் முடிந்த குளிர்கால கூட்டத் தொடரின்போது மக்களவையில் கடந்த மாதம் 17ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், சில கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக மாநிலங்களவைில் நிறைவேற்ற முடியவில்லை.
கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கிய குளிர்கால கூட்டத் தொடர், இருதினங்களுக்கு முன் முடிந்து விட்டது. இருப்பினும் இந்த தொடர் தொடங்கப்பட்டதில் இருந்து கணக்கிட்டால், வரும் 22ம் தேதியுடன் 42 நாள் முடிகிறது. அன்றைய தினம் முத்தலாக் அவசர சட்டமும் காலாவதியாகிறது. அதற்குள்  முத்தலாக் அவசர சட்டத்தை மத்திய அரசு மீண்டும் பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றிரவே அதற்கான அறிவிப்பு வெளியானது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம், முத்தலாக் தடை மேலும் 6 மாதங்கள் நீடிக்கும். அதற்குள் மக்களவை தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும். அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த விவகாரத்தில் முடிவுகள் மாற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்