SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அக்டோபர் முதல் ரூ.15க்கு மேல் குறைப்பு : நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை சிறிது உயர்வு

2019-01-11@ 00:21:35

*    கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் 4ம் தேதி வரை சென்னையில் பெட்ரோல் ₹8.07, டீசல் ₹8.17 உயர்ந்தது. பின்னர் அக்டோபர்5ம் தேதி பெட்ரோல் ₹2.63 டீசல் ₹2.68 குறைந்தது.

* மீண்டும் அக்டோபர் 6 முதல் 16ம் தேதி வரை பெட்ரோல் ₹1.40, டீசல் ₹2.93 உயர்ந்தது.

*அக்டோபர் 18 முதல் இந்த மாதம் 5ம் தேதி வரை சென்னையில் பெட்ரோல்  ₹15.25, டீசல் ₹14.42 குறைந்தது.


புதுடெல்லி: நீண்ட நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை சற்று உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 40 காசு உயர்ந்து ₹71.47 ஆகவும், டீசல் 31 காசு உயர்ந்து ₹66.01 ஆகவும் அதிகரித்தது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்கி–்ன்றன. கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்ததால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டது. அக்டோபர் வரை இந்த விலை உயர்வு நீடித்தது. அக்டோபர் 18 முதல் விலை தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது.

 அக்டோபர் முதல் இதுவரை சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹15.25, டீசல் ₹14.42 குறைந்துள்ளது. கடந்த டிசம்பரில் 2 நாட்களில் பெட்ரோல் 17 காசுகள் மட்டும் உயர்ந்தது. இந்த மாதம் பெட்ரோல் நேற்று 40 காசும் கடந்த 7ம் தேதி 20 காசும் உயர்ந்தது. டீசல் கடந்த 7ம் தேதி 8 காசும் நேற்று 31 காசும் உயர்ந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்