SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமான பயணிகளுக்கு ரூ.50 லட்சம் இன்சூரன்ஸ் இலவசம் : பிப்ரவரி முதல் அமலுக்கு வருகிறது

2019-01-11@ 00:20:52

    ஐஆர்சிடிசி மூலம் சராசரியாக 6,000 விமான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

     விமான டிக்கெட் முன்பதிவுக்கு செயல்பாட்டு கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

     இந்த நிறுவன இணையதளம் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு கட்டணம் எதுவும் இன்றி ₹50 லட்சம் காப்பீடு வழங்கப்பட உள்ளது.

புதுடெல்லி: விமான பயணிகளுக்கு ₹50 லட்சம் இலவச காப்பீடு அளிக்க அளிக்க ஐஆர்சிடிசி முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதல் இது அமலுக்கு வருகிறது.ஐஆர்சிடிசி மூலம் ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. விமான டிக்கெட் முன்பதிவு வசதியும் இதில் உள்ளது. ரயிலில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள், டிக்கெட் கிடைக்காவிட்டால் இந்த இணையதளம் மூலமாகவே விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 தற்போது ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் 5,000 முதல் 6,000 ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. விமான டிக்கெட் முன்பதிவுக்கு சில இணையதளங்கள் செயல்பாட்டு கட்டணமாக ₹200 வசூலிக்கின்றன. ஆனால், ஐஆர்சிடிசி இதற்கு 50 ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக்கொள்கிறது. இதுபோல், இந்த டிக்கெட்களை ரத்து செய்வதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பது கிடையாது.வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ரயில்வே, பயணிகளை ஈர்க்க பல திட்டங்களை அறிவிக்கிறது. கடந்த மாதம், மகாராஜா ஆடம்பர எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு ஏர் இந்தியா டிக்கெட்டில் 17 சதவீத தள்ளுபடி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான ஏர் இந்தியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

 தற்போது, ஐஆர்சிடிசி மூலம் முன்பதிவு செய்யப்படும் விமான டிக்கெட்களுக்கு காப்பீடு வசதியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஐஆர்சிடிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.பி.மால் கூறுகையில், இந்த இன்சூரன்ஸ் திட்டம் எங்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் அனைத்து பயணிகளுக்கும் பொருந்தும், பயண வகுப்பு பாகுபாடின்றி இலவசமாக இந்த காப்பீடு வசதி வழங்கப்பட உள்ளது’’ என்றார். அடுத்த மாதம் முதல் இந்த காப்பீடு சலுகை அமலுக்கு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்