SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சட்டீஸ்கரில் கிராமத்தில் மக்கள் சோகம் கடவுளாக வணங்கப்பட்ட 130 வயதான முதலை சாவு

2019-01-11@ 00:15:29

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் கடவுளாக வழிபடப்பட்டு வந்த 130 வயது முதலை இறந்ததால், கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதற்கு மலர்தூவி இறுதி அஞ்சலி செலுத்தினர்.சட்டீஸ்கர் மாநிலம், பெமிதாரா மாவட்டத்தில் உள்ள கிராமம் பவா மோஹ்தாரா. இங்குள்ள குளத்தில் 250 கிலோ எடையும், 3.4 மீட்டர் நீளமும் உள்ள முதலை நீண்ட காலமாக வசித்து வந்தது.

இது, குளத்தை பயன்படுத்தும் மக்கள், கால்நடைகளை எதுவும் செய்தது கிடையாது. எனவே, கிராம மக்கள் இந்த முதலைக்கு ‘கங்காராம்’ என பெயரிட்டு வழிபட்டு வந்தனர். தற்போது அதற்கு 130 வயது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வயது மூப்பு காரணமாக அந்த முதலை இறந்து நீரில் மிதந்தது. வனத்துறையினர் வந்து அதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், அதை கிராம மக்களிடம் ஒப்படைத்தனர். அதை பெற்றுக் கொண்ட கிராம மக்கள், முதலையின் சடலத்துக்கு மலர்தூவி இறுதி மரியாதை ெசய்தனர். பின்னர், உடலை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

முதலை என்றாலே பீதியடையும் மக்கள் மத்தியில், முதலை ஒன்று மக்களின் பாதுகாவலனாக இருந்து கிராமத்தை பாதுகாத்ததால் அதை இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கிராமத் தலைவர் மோகன் சாஹூ கூறுகையில், `‘முதலை கங்காராமிடம் கிராம மக்கள் மிக அன்பு செலுத்தி வந்தனர். அந்த குளத்தில் குளிக்கும் யாருக்கும் அந்த முதலை எந்த தீங்கும் செய்ததில்லை. எனது தாத்தா சிறுவனாக இருந்தபோதே அந்த குளத்தில் இந்த முதலை வசித்து வந்ததாக கூறியுள்ளார். 2 முறை அந்த முதலை பக்கத்து ஊருக்கு சென்றுவிட்டது. ஆனால், கிராம மக்கள் அதை மீண்டும் இந்த குளத்திற்கு கொண்டு வந்து விட்டனர். முதலை இறந்தது, எங்கள் குடும்பத்தில் ஒருவர் இறந்தது போன்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் கிராமத்தை பாதுகாத்து வந்ததால் இந்த குளத்தின் கரையிலேயே முதலைக்கு நினைவு மண்டபம் கட்ட திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • modi1

  ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

 • dr

  மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

 • hongkong

  சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

 • jappan

  ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

 • fire

  அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்