SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்வதேச அளவில் மிகச் சிறந்த பாஸ்போர்ட்டாக ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் தேர்வு

2019-01-10@ 16:14:02

டோக்கியோ : சர்வதேச அளவில் மிகச் சிறந்த பாஸ்போர்ட்டாக இரண்டாவது ஆண்டாக ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Henley & Partners' நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பாஸ்போர்ட்டுகள் மற்றும் பல்வேறு நாடுகளின் விமான ஆணையங்களின் தகவல்களை ஆய்வு செய்து அதன் மூலம் சிறந்த பாஸ்போர்ட்டுக்கான பட்டியலை அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிக நாடுகளுக்கு குறைந்த விசா கெடுபிடிகளுடன் செல்ல உதவும் பாஸ்போர்ட்டுகள் பட்டியலில் ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதல் இடம் பிடித்துள்ளது.

ஜப்பான் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகின் 190 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா எடுக்காமல் செல்லலாம். இந்த பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 61 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா இல்லாமல் செல்லலாம். கடந்த ஆண்டு இந்திய பாஸ்போர்ட் பட்டியலில் 81வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபால் ஆகிய நாடுகள் பட்டியலில் 104,102, 94 ஆகிய இடங்களை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன. மேலும் சீனா 69வது இடத்திலும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா 6வது இடத்திலும் உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்