SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேசிய சீனியர் வாலிபால் தொடர் : பைனலுக்கு முன்னேறியது தமிழகம்

2019-01-10@ 00:16:39

சென்னை: தேசிய சீனியர் வாலிபால் தொடரின் பைனலில் விளையாட தமிழக ஆண்கள் அணி  தகுதி பெற்றது.சென்னையில் நேற்று நடந்த பரபரப்பான அரை இறுதியில் கேரள அணியுடன் மோதிய தமிழகம் 25-27 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது. பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய தமிழக அணி வீரர்கள் 25-14, 25-18, 25-16 என அடுத்த 3 செட்களையும் தொடர்ச்சியாக கைப்பற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக நடந்த மற்றொரு அரை இறுதியில் கர்நாடகா- பஞ்சாப் அணிகள் மோதின. இதில் கர்நாடகா அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர் செட்களில் வென்றது. இறுதிப் போட்டியில் தமிழகம் - கர்நாடகா மோதுகின்றன.

மகளிர் பிரிவில் நடந்த முதல் அரை இறுதியில்  ரயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற நேர் செட்களில் மகாராஷ்டிரா அணியை வீழ்த்தியது. 2வது அரை இறுதியில் கேரளா - மேற்கு வங்கம் மோதின. இப்போட்டியில் கேரளா 25-18, 25-9, 25-9 என்ற நேர் செட்களில் எளிதாக வென்றது. மகளிர் பைனலில் ரயில்வே - கேரளா பலப்பரீட்சையில் இறங்குகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்