SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் கால்கள் கொண்ட 'கார்': ஹூண்டாய் நிறுவனம் தயாரிப்பு

2019-01-09@ 14:08:32

லாஸ் வேகாஸ்: பேரிடர் காலங்களில் மீட்பு பணியில் ஈடுபடும் வகையில் கால்கள் கொண்ட கார் ஒன்றை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்துள்ளது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த கண்காட்சியில் நூதன பொருட்கள் மற்றும் நவீன ரக சாதனங்கள் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், நான்கு நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கண்காட்சியில், எலிவேட் என்ற நான்கு கால்கள் கொண்ட காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரில் டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த வாகனத்தை நிலச்சரிவு, நிலநடுக்கத்தால் ஏற்படும் பேரழிவு, ஆழிப்பேரலையால் உண்டாகும் தொடர் வினைகள் போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான இடிபாடுகளுக்கு நடுவிலும் லாவகமாக செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தை ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்க முடியும். மேலும், அவசர காலங்களில் மீட்பு பணியில் மட்டுமல்லாது ஆம்புலன்ஸ் போன்றும் இந்த வாகனத்தை செயல்படுத்தலாம் என்று ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகனம் மற்றும் ரோபோடிக்ஸ் ஆகிய இரு தொழில்நுட்பங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் சாலைகளில் செல்லும்போது, வாகனப் போக்குவரத்தில் பெரிய புரட்சியே ஏற்படும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vagaidamflood

    பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு... 2 தரைப்பாலங்கள் மூழ்கியது!

  • bangladeshtrain

    வங்கதேசத்தில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 16 பேர் பலியான சோகம்!

  • wildfireaus

    காட்டுத்தீ காரணமாக அபாய நிலையை எட்டியுள்ள ஆஸ்திரேலியா: பேரழிவு காரணமாக அவசரநிலை பிரகடனம்

  • hongkongprofire

    ஹாங்காங் போராட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்: வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபருக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்

  • chicagosnow

    பனிப்பொழிவின் உச்சத்தில் சிகாகோ: 6 அங்குலத்திற்கு பனிப்போர்வை படர்ந்து காட்சியளிக்கும் நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்