SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசத்தும் நிஸான் கிக்ஸ்

2019-01-06@ 01:13:28

இந்தியாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய மாடல் கிக்ஸ். வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மாடலைவிட இந்தியாவில் வர இருக்கும் மாடல் அளவில் பெரியது. முகப்பில் ‘வி’ வடிவிலான க்ரோம் பட்டையுடன்கூடிய பெரிய க்ரில் அமைப்பு, பூமராங் வடிவில் அழகாக செதுக்கப்பட்ட ஹெட்லைட் க்ளஸ்ட்டரில் எல்இடி புரொஜெக்டர் விளக்குகள் உள்ளன. தவிர, பனி விளக்குகள், ஸ்கிட் பிளேட் ஆகியவை முகப்பை கவர்ச்சியாக காட்டுகிறது. முகப்பை போலவே, பக்கவாட்டிலும் மிக கவர்ச்சியாக இருக்கிறது நிஸான் கிக்ஸ். கருப்பு வண்ணத்திலான பில்லர்கள், கூரை, சைடு மிரர்கள், வீல் ஆர்ச் சட்டங்கள் கண்ணை கவர்கின்றன. மெஷின் கட் அலாய் வீல்களும் கவர்ச்சியை ஒருபடி தூக்குகிறது.

17 அங்குல 5 ஸ்போக் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. 210 மி.மீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டுள்ளது. 5.2 மீட்டர் டர்னிங் ரேடியஸ் பெற்றிருக்கிறது. பின்புறத்திலும் பூமராங் வடிவிலான டெயில் லைட் கிளஸ்ட்டர்கள், வலிமையான கருப்பு வண்ண பம்பர் அமைப்பு, சில்வர் வண்ண ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த காரின் தோற்றத்திற்கு வலு சேர்க்கிறது. இந்த காரில் டாக்கோமீட்டருக்கும், எரிபொருள் அளவு மானிக்கும் இரண்டு அனலாக் டயல்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதன் நடுவில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் திரை உள்ளது. ஸ்பீடோமீட்டர் திரைக்கு மேலாக மல்டி இன்பர்மேஷன் திரை இடம்பெற்றுள்ளது. இதன்மூலமாக, ஓடிய தூரம், டிரிப் மீட்டர், வாகனத்தின் சராசரி வேகம், மைலேஜ் உள்ளிட்ட பல தகவல்களை பெற முடிகிறது.

இதன் இருக்கை வசதியாகவும், சொகுசாகவும் இருக்கிறது. ஓட்டுனர் இருக்கையை 6 நிலைகளில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்ய முடியும். பின் இருக்கை போதுமான இடவசதியை அளிக்கிறது. உயரமானவர்கள் கூட அமர்வதற்கு போதுமான ஹெட்ரூம் மற்றும் கால் வைப்பதற்கான ஹெட்ரூம் இடவசதியை அளிப்பது சிறப்பு. வெளிநாடுகளில் உள்ள மாடலைவிட இந்தியாவில் பல மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பெண்கள் புடவை, ஆண்கள் வேஷ்டி அணிந்து ஏறி, இறங்குவதற்கு ஏதுவாக கதவு மற்றும் வாயிற் அமைப்பில் மாற்றங்களை செய்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விஷயம்.

360 டிகிரி கோணத்தில் காரை கண்காணித்து பார்க்கிங் செய்வதற்கான கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. ₹20 லட்சத்திற்கு மேல் பட்ஜெட்டிலான கார்களிலேயே இது அரிதான விஷயமாக இருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 104 பிஎச்பி பவரை வழங்கவல்ல 1.5 லிட்டர் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. டீசல் மாடலில் 1.5 லிட்டர் கே9கே டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுதல் தரத்தில் இந்த செக்மென்ட்டில் சிறந்த மாடல்களில் ஒன்றாகவும் குறிப்பிட முடிகிறது. இந்த காரில் ஈக்கோ டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதனை பயன்படுத்தும்போது இன்ஜின் செயல்திறன் குறைந்து அதிக எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறத்தில் இந்த ஈக்கோ டிரைவிங்மோடு பயன்படுத்தினால், கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை பெற வழிகிடைக்கும். XE, XL மற்றும் XV ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருக்கிறது. ₹11 லட்சம் முதல் ₹15 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்