SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலை விவகாரம்: சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல்

2019-01-05@ 08:03:26

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி இருப்பது தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. தடசேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் மீது மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பிவிட்டனர். இதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னாள் எம்எல்ஏ சசியின் வீடு மீது வெடிகுண்டு வீசப்பட்டதால் மேலும் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இதே போல் பாஜக எம்பி முரளிதரன் வீட்டின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக குறப்படுகிறது. சபரிமலையில் 2 பெண்கள் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாஜக-வினர் தொடர்ந்து போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 1319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்