SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உண்மை விரைவில்

2019-01-04@ 00:18:26

எகிப்து பிரமீடுகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. இவை பிரபஞ்சத்தின் சக்தியை இழுத்து பூமிக்கு அளிப்பவை என்று பல்வேறு கருத்துக்கள் உண்டு. பிரமீடுகளை போன்ற உருவங்களை வீட்டில் வைத்திருந்தால், நல்ல சக்தி கிடைக்கும் என்று எல்லாம் கூட பரவலான நம்பிக்கை உண்டு. இந்த பிரமீடுகளின் ராஜா என்று கருதப்படுவது, கிசாவில் உள்ள கிரேட் பிரமீடு. இந்த பிரமீடு, 4400 ஆண்டுகளுக்கு முந்தையது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்டும் இருக்கலாம் என்பது  விஞ்ஞானிகளின் கருத்து. இந்த பிரமீடு சமீபத்தில் திறக்கப்பட்டு விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டது. அதன் உள்ளே 98 அடி நீளத்துக்கு ஒரு வெற்றிடம் காணப்பட்டது. இதன் உள்ளே இருந்த கதிர்வீச்சு, துகள்கள் ஆகியவற்றை பற்றி விஞ்ஞானிகள் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதில் மிக, மிக ஆச்சரியப்படத்தக்க விஷயம், பிரபஞ்சத்தில் இருக்கும் நுண் துகள்கள் இங்கு காணப்பட்டன. இவை மோன்ஸ் என்று அழைக்கப்படும். அதாவது, பிரபஞ்ச கதிர்கள், பூமியின் மேற்பரப்பில் மோதும்போது ஒன்று கூடும்போது, ஏற்படுபவைதான் மோன்ஸ். இவை பிரமீடின் உள்ளே காணப்பட்டன. ஆனால், அவை செயலற்றதாக இருந்தன. அதாவது பூமியின் மேற்பரப்பில் அவை மிக சக்திவாய்ந்ததாக இருக்கும். பிரமீடின் உள்ளே அவை அமைதியாக இருந்தன.

அதாவது, உலகத்தில் தற்போது உலா வந்துக் கொண்டிருக்கும், பிரமீடு உருவங்களை வீட்டில் வைத்திருந்தால் பிரபஞ்சத்தில் இருக்கும் நல்ல சக்திகள் நமக்கு வந்து சேரும் என்பது உண்மையாக இருக்குமா என்பது கூட விஞ்ஞானிகளிடம் புதிய கேள்வியை எழுப்பி உள்ளது. இதுகுறித்து விரிவான ஆராய்ச்சியில் ஈடுபட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். கிரேட் பிரமீடு, ஒரு நூலிழை கூட ஏற்ற இரக்கம் இல்லாமல், அட்சர சுத்தமாக கட்டப்பட்டுள்ளது. இதற்காக அவர்கள் பெரிய குளம்போன்று வெட்டி தண்ணீரை நிரப்பி மட்டத்தை பார்த்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. இப்படி எண்ணற்ற அதிசயங்கள் பிரமீடின் உள்ளே மறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த அதிசயங்களை ஆராய்ந்து வரும் விஞ்ஞானிகள் இந்த ஆண்டில் அதன் விரிவான அறிக்கையை வெளியிட தீர்மானித்துள்ளனர். முடிவு, பிரமீடு உருவத்தை வீட்டில் வைத்திருக்கலாமா என்பது இந்த ஆண்டிலேயே உறுதியாகிவிடும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்