SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கால்தடம் வைத்து புலியின் பாலினத்தை அறியலாம்

2019-01-03@ 14:52:22

பூனை இனங்களில் மிகப்பெரியது புலியாகும். இதன் கால்களும், தோள்களும் மிகவும் வலுவானவை. எனவே தன்னை விட எடை அதிகமான விலங்குகளையும் வேட்டையாடி இழுத்துச்செல்லும் திறன் பெற்றுள்ளது. பெண் புலிகள், ஆண் புலிகளைவிட சிறியதாவே இருக்கும். பெண் புலிகளைக் காட்டிலும் ஆண் புலிகள்  1.7 மடங்கு எடை அதிகம் இருக்கும். மேலும் பெண் புலிகளைவிட ஆண்புலிகள் அகலமான முன்பாதங்களைப் பெற்றிருக்கும்.

இந்த வேறுபாட்டை வைத்து உயிரியலாளர்கள் புலிகளின் வழித்தடத்தை வைத்து அவற்றின் பாலினத்தை கண்டறிய பயன்படுத்துகின்றனர். புலியின் மண்டை ஓடானது சிங்கத்தின் மண்டையோட்டைப் போலவே உள்ளது. சிங்கத்தின் மண்டையோடானது அகன்ற நாசித்துளைகளைக் கொண்டிருக்கும். இருப்பினும் இவ்விரு இனங்களுக்குமான மண்டை ஓட்டின் வேறுபாடுகள் குறைவாகவே இருக்கிறது. இதனால் கீழ்தாடையின்அமைப்பை பயன்படுத்தியே சிங்கம், புலி இனங்களை அறிந்து கொள்கின்றனர்.

புலிகள் தனியாக வாழும் தன்மை கொண்டது. இதன்வாழ்விடம் இரை கிடைக்கும் தன்மையைப் பொறுத்து அமைகிறது. பெரும்பாலும் புலிகள் ஒன்றைஒன்று சந்திப்பைத் தவிர்க்கும் தன்மை கொண்டிருக்கின்றன. இருப்பினும் ஆண், பெண்புலிகள் இரையை ஒன்றாக பகிர்ந்து கொள்கின்றன. பெண்புலிகள் பெரும்பாலும் ஆண்புலிகள் அதன் குட்டிகளின் அருகில் இருப்பதை விரும்புவதில்லை. பிறபகுதிகளைச் சேர்ந்த பெண்புலிகள் தங்கள் பகுதிக்குள் நுழைவதைப் பெண்புலிகள் சகித்துக் கொண்டாலும், ஆண்புலிகள் அவ்வாறு இருப்பதில்லை.

இதனால் அச்சுறுத்தல் போன்றவற்றின் மூலம் இவற்றை துரத்துகின்றன. வெவ்வேறு உத்திகளைப் பயன்படுத்தி புலிகள் காட்டில் உள்ளதை ஆராயப்படுகின்றன. புலிகளின் எண்ணிக்கை கடந்தகாலங்களில் கால்தடங்கள் மூலம் மதிப்பிடப்பட்டன. இந்தமுறை தவறானது என்ற கண்டறியப்பட்டுள்ளது. இதற்குப்பதிலாக கேமராப்பதிவுகள் பயன்படுத்தப்படுகிறது. புலியின் கழிவுகளில் இருக்கும் டிஎன்ஏ.அடிப்படையில் இவற்றின் எண்ணிக்கை மதிப்பிடப்படுகிறது.

ரேடியோ கழுத்துப்பட்டைகளும் இவற்றைக் கண்காணிக்க பயன்படுத்தப்படுகிறது. புலிகள் தனியாகவே வேட்டையாடும். இதர பூனையினங்களைப் போலவே இதுவும் பதுங்கி பாய்ந்து உடலின் அதிகஎடையை இரையின் மீது தாக்கி நிலைகுலையவைத்து கொல்லும். அதிகஎடை கொண்டிருந்தாலும் புலிகள் 65 கிலோமீட்டர் வரை பாய்ந்துஓடும் திறன் கொண்டது. இருப்பினும் மிகக்குறுகிய தூரம் மட்டுமே இந்தவேகத்தில் செல்ல முடியும். எனவேதான் முடிந்தளவு இரையின் மிக அருகே சென்ற பிறகே தனது ஓட்டத்தைத்துவக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்