SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆபத்தான கொண்டாட்டம்

2019-01-03@ 00:31:24

புத்தாண்டு கொண்டாட்டத்தை வரவேற்கும் நள்ளிரவு வேளையில் சாலை விபத்துகளில் தமிழகம் முழுவதும் 20க்கும் அதிகமானோர் பலியாகிவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. விபத்தில்லா புத்தாண்டை வலியுறுத்தி போக்குவரத்து போலீசார் கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு  பிரசாரம் மேற்கொண்டாலும் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இந்த புத்தாண்டு நள்ளிரவில் அதிக விபத்து நடந்து இருக்கிறது.சென்னை மாநகரில் மட்டும் 2 ஆயிரம்
போக்குவரத்து போலீசார், 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 162 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. பைக் ரேசில் ஈடுபடும் நபர்களை பிடிக்க 20 சிறப்பு படை அமைக்கப்பட்டு இருந்தது.  திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் செவ்வாய் அதிகாலை 4 மணி வரை போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.

1022 எல்இடி பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தன. 97 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன. ஆனாலும் சென்னையில் மட்டும் 8 பேர் விபத்தில் பலியாகி புத்தாண்டு கொண்டாட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.  தமிழகம் முழுவதும் எண்ணிக்கை 20ஐ தாண்டி உள்ளது.சென்னை மாநகரில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளன. குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக 263 வழக்குகள், பைக்கில் மூன்று பேர் பயணம் செய்தது தொடர்பாக 233 வழக்குகள், அதிவேக பயணம்  செய்ததாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் மொத்தம் 234 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.சென்னையை போல் கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்துகள் அதிகம், உயிரிழப்புகளும் அதிகம். இதற்கு காரணம் அதிக போதையில் வாகனம்  ஓட்டியவர்கள்தான் என்பது தெரியவந்துள்ளது. அதுவும் பல இடங்களில் அதிகாலை 1 மணி வரை சரக்கு விநியோகம் நடந்து இருக்கிறது. விற்பனையை அதிகரித்து காட்ட வேண்டும் என்பதற்காக தாராளமாக செய்யப்பட்ட மது  விற்பனையால் ஒரே நாள் இரவில் 20 பேர் உயிர் பறிபோய் இருக்கிறது.

முன்எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு நள்ளிரவு கொண்டாட்டத்திற்காக அதிகம் பேர் ஒவ்வொரு நகரிலும் குறிப்பிட்ட இடங்களில் திரண்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறித்தான்  போனார்கள். இதனால் 2019ம் ஆண்டை இனிமையாக வரவேற்கும் அந்த நள்ளிரவு நேரம் பலருக்கு ஆபத்தானதாக மாறிப்போனது. எத்தனை கொண்டாட்டமாக இருந்தாலும் அதில் ஒரு கட்டுப்பாடும், ஒழுங்குமுறையும்  இருந்தால்தான் அது ஆபத்தில்லாத ஒன்றாக அமையும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்