SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிக் அச்சுறுத்தல்

2019-01-02@ 01:25:55

பிளாஸ்டிக் - ஒரு  பெட்ரோலிய பொருள். உலக அளவில் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இந்தியா மூன்றாம்  இடத்தில் உள்ளது. இதன் பயன்பாடு, உணவு முறையோடு  கலந்திருப்பது பெரும் ஆபத்து. உணவு வகைகளை, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி எடுத்துச்செல்லும்போது அதில் உள்ள ரசாயனங்கள் நம் உடலுக்குள் சென்றுவிடுகிறது. இதனால் ஹார்மோன் மாற்றம், உடல்பருமன், சிறுவயதிலேயே  பருவம் அடைதல், ஆண்மை குறைவு, இதயநோய், புற்றுநோய், குழந்தையின்மை,  கருச்சிதைவு, நீரிழிவு, கல்லீரல் பாதிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னை  உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக்  பொருட்களை எரிப்பதால், தீவிர  நுரையீரல் பிரச்னை, சுவாச கோளாறு, பார்வைகோளாறு ஏற்படுகிறது. நீர்வரத்து கால்வாய்களில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் சேமிப்பை தடுக்கிறது. மண்ணோடு மண்ணாக மக்கிப்போகாமல் நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கிறது. குழந்தைகளின் பீடிங்  பாட்டிலில் மிக மோசமான பிளாஸ்டிக் பாதிப்பு இருக்கிறது. இதை உணர்ந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய 50  மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை 1.1.2019 முதல் அமலுக்கு வந்துள்ளது.

பால், தயிர், எண்ணெய்  மற்றும் மருத்துவ  பொருட்களுக்கு மட்டும் இதிலிருந்து விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஏற்கனவே 14 மாநிலங்களில் இந்த தடை  உத்தரவு அமலில் உள்ளது. தற்போது, தமிழகம் 15வது மாநிலமாக இப்பட்டியலில்  இணைந்துள்ளது. தமிழக அரசின் இந்த  தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், இலை, மட்டை, மரம், காகிதம்  போன்றவற்றை, மாற்றுப்பொருளாக அரசே தயாரித்து, விநியோகம் செய்தால் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு  சிறந்த வழிகாட்டியாக இருக்கும். அதிகம் பயன்படுத்தி பழக்கப்பட்டு விட்ட  நிலையில், உடனடியாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது கடினம். முதல்கட்டமாக உணவுப்பொருளோடு கலந்திருக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை  கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. தமிழகத்தில் பிளாஸ்டிக்  பொருட்களுக்கு தடை விதிப்பது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே, கடந்த 2002ம் ஆண்டில்  அதற்கான தடை சட்டத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்தார்.  ஆனால், வெளிப்படையான காரணங்கள் எதுவும் கூறாமல் அச்சட்டத்தை திரும்ப பெற்றார்.

பிளாஸ்டிக்  தடை சட்டத்துக்கு அப்போது ஏற்பட்ட நிலைமை, மீண்டும் வந்துவிடக்கூடாது. இதில், அரசு உறுதியாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக்  பொருட்களுக்கான தடையால் அந்த தொழிலை நம்பியிருந்த தொழிலாளர்களையும் அரசு கைவிட்டு விடக்கூடாது. தமிழக அரசின் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பது, இருப்பு வைப்பது, விற்பது, பயன்படுத்துவது குற்றம். இக்குற்றம் கண்டறியப்பட்டால் முதல்கட்டமாக,  ரூ100 முதல் ரூ10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து ஒரே  தவறை மீண்டும்  செய்தால், தொழில் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் இன்றி  கடை நடத்தினால்,  சீல் வைக்கப்படும். இந்த அதிரடி நடவடிக்கை தமிழகம் முழுவதும் தொடர்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • SouravGangulyBCCI

  பிசிசிஐ அமைப்பின் 39வது தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பதவியேற்பு..: புகைப்படங்கள்

 • SkyCityFireAuckland

  நியூசிலாந்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த மாநாடு மையத்தில் 2வது நாளாக பற்றி எரியும் தீ..: அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம்!

 • NorthKarnatakaRain23

  கர்நாடகாவில் மீண்டும் கொட்டித் தீர்க்கும் கனமழை..: 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

 • DiwaliPrep2k19

  நெருங்கி வரும் தீபாவளி...: விளக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்...பட்டாசு, பரிசுப் பொருட்கள் விற்பனை படுஜோர்!

 • DanishLightHouse

  கடலரிப்பினால் நகர்த்தி வைக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம்...: டென்மார்க்கில் ஆச்சரியம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்