SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியான நடவடிக்கை

2018-12-30@ 00:03:52

தமிழகம், கல்வியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக திகழ்கிறது. மாநிலத்தில் எழுத்தறிவு பெற்றவர்கள் 80.33 சதவீதமாக இருக்கின்றனர். மேலும் தொடக்க கல்வியில் மாணவர் சேர்க்கை 100 சதவீதத்தை எட்டியுள்ளது. படிப்பதற்கு தடையாக வறுமை இருக்கக்  கூடாது என்பதால்தான் தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் அது மேம்படுத்தப்பட்டு சத்துணவு திட்டமாக மாறியது. இப்படி கல்வியில் முன்னேறியுள்ள நிலையில், ஏனோ தொய்வு ஏற்பட்டு கல்வித் திட்டத்தில் 10 ஆண்டுகளாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதன் பாதிப்பு தேசிய அளவில் போட்டித் தேர்வுகளில் தமிழக  மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், கல்வியை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தேர்வுத் துறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,  கடந்த ஆண்டு தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. அதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் வீதம் மிகவும் குறைவாக இருந்தது. மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு  மார்ச்சில் தொடங்க உள்ளது. அதற்காக மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் பெயர்கள் பெறப்படுகிறது. இந்த விவரம் தேர்வுத்துறைக்கு வந்தபோது, பிளஸ் 1 தேர்வை 28 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் தவிர்த்துள்ளது தெரிய  வந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் 8 லட்சம் பேர் படித்துள்ள நிலையில் 28 ஆயிரம் பேர் தேர்வு எழுதாமல் விட்டது தேர்வுத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பிளஸ் 2 வகுப்பில் சேர்க்காமல், மாற்றுச் சான்று வழங்கி பள்ளியை விட்டு நீக்கியுள்ளது மேற்கண்ட பட்டியல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இது சரியான நடவடிக்கை  இல்லை என்றும் நீக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

பொதுத் தேர்வில் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 100 சதமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற முறையற்ற செயலில் பல தனியார் பள்ளிகளும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் ஈடுபட்டுள்ளன. இவற்றிற்கு முற்றுப்புள்ளி  வைக்கும் விதத்தில் தற்போதுதான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பள்ளியின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தவறான செயலில் அந்தப் பள்ளிகள் ஈடுபட்டுள்ளன. இதனால், மாணவர்கள், அவர்களது பெற்றோர் அடையும் மன உளைச்சலை எண்ணிப் பார்க்க முடியாது. மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் இடையில் பாதிக்கப்படக்  கூடாது என்பதை மனதில் வைத்து இதுபோன்ற தவறான செயலில் ஈடுபடுவதை பள்ளிகள் நிறுத்திக் கொள்வதே சரியான நடைமுறை என்பதை தவறு செய்த பள்ளிகள் உணர்ந்தால் சரி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்