SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சரியான முடிவு

2018-12-29@ 05:07:01

தமிழகத்தில் பழங்காலம் தொட்டு தை திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடங்கல் ஏற்பட்டது. தடை வரை சென்றது. ஆனால், இந்த ஆண்டு ஜனவரி  15ம் தேதி முதல் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், மஞ்சு விரட்டு என்று பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.  குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இதே போல, மற்ற மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி  நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிகளில் காளைகளை அடக்கி வீரத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனால், தை பொங்கல் திருநாள் விழா என்றாலே தமிழக வாலிபர்கள், இளைஞர்கள் இடையே ஓர் எழுச்சி காணப்படும். காளைகளை இம்சைபடுத்துவதாக வழக்கு தொடரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பாரம்பரிய விளையாட்டுப் போட்டியை தடுக்கவும் நிறுத்தவும் கூடாது என்ற குரல் ஓங்கி ஒலித்தது. இதையடுத்து, கடும்  நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இவ்வாறு கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டி தட்டுத்தடுமாறி நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு தை பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக காளைகளை ஆயத்தப்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நடத்தப்படும்  ஜல்லிக்கட்டு போட்டிக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், அவனியாபுரத்தில் ஜன.15ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும். 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு  போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவித இடையூறும் இல்லாமல் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அரசு முன்னெச்சரிக்கையாக அரசாணை வெளியிட்டுள்ளது வரவேற்கதக்கது. காளைகளை இம்சிக்காமல் அதேவேளையில் வீரத்தை வெளிப்படுத்தி தமிழர்களின் பாரம்பரியத்தை காக்க அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் உள்பட அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

 • pakisthan_saudi1

  பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்