SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உச்சகட்ட அலட்சியம்

2018-12-28@ 00:42:36

சாத்தூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையிலேயே எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட தகவல் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. என்னதான் அரசு தரப்பில் சம்பந்தப்பட்ட கர்ப்பிணிக்கும், அவரது கணவருக்கும் அரசு வேலை அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டாலும், கொடிய வாழ்க்கை பயணத்தை தொடங்கப்போவது குறித்து, அவர்களுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியாக இருக்கும்?தனியார் மருத்துவமனைகளின் பணம் பறிப்பு, அலட்சியங்கள் போன்றவற்றின் காரணமாகத்தான் ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளை நாடுகின்றனர். அங்கும் உயிருடன் விளையாடியிருப்பது எவ்வளவு பெரிய கொடுமை?தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த சிவகாசியில் இருந்து ஒரு வாலிபர் தான் கொடுத்த ரத்தத்தில் எச்ஐவி இருப்பதை, பின்னாளில் அறிந்து, மற்றவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாதே என்ற பதைபதைப்புடன் மருத்துவமனையை தொடர்புக் கொண்டு தகவல் தெரிவிக்கிறார். ஆனால், அது சிவகாசியில் இருந்து பயணித்து சாத்தூர் வரை வந்து கர்ப்பிணி பெண்ணுக்கும் ஏற்றப்பட்டு விட்டது. அதாவது சிவகாசியில் தானமாக கொடுக்கப்பட்ட ரத்தம் பரிசோதிக்கப்படவே இல்லை என்றால், அதை பெற்றுக் கொண்ட சாத்தூர் மருத்துவமனையிலும் சோதிக்கப்படவில்லை.

இந்த சின்ன ஊர்களிலேயே இந்த நிலைமை என்றால், பெரிய ஊர்களில்... நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்தால், நெஞ்சம் பதைபதைக்க ஆரம்பிக்கிறது.ஒருவர் ரத்தத்தை ெகாடுக்கும்போதே அவர் திடகாத்திரமான ஆள்தானா, அவரது ரத்தத்தில் எச்ஐவி, ெஹபடைடீஸ் பி போன்ற பாதிப்புகள் இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டியது மிக அவசியம். ஆனால், ஆளைப்பற்றியும் கவலைப்படுவதில்லை; ரத்தத்தின் சுத்தத் தன்மை குறித்தும் சோதிப்பதில்லை. இயந்திரங்கள் போன்று, ரத்தம் கொடுக்க வந்த ஒருவரின் ரத்தத்தை உறிஞ்சி, பாக்ெகட்டில் அடைத்து, அதை பால் பாக்கெட் போன்று இன்னொரு இடத்துக்கு அனுப்பி வைப்பதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ள ரத்தங்களை பரிசோதிக்க வேண்டும். அதுவும் கடமை உணர்ச்சியுடன் இதை செய்ய மருத்துவ ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளுக்கு தேவையான உபகரணங்களை எந்த காரணத்தையும் கூறாமல் அரசு உடனடியாக சப்ளை செய்ய வேண்டும். தவறை செய்த ஊழியர்கள், மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அதை பொதுவெளியில் தெரியப்படுத்துவதன் மூலம்தான், மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்