SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அலட்சியம் வேண்டாம்

2018-12-27@ 00:01:36

தமிழகம் முழுவதும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பிளாஸ்டிக் தடை செயல்பாட்டை கண்காணிக்க 10 ஆயிரம் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை பல்வேறு வியாபார சந்தைகள், மார்க்கெட்டுகளில் அதிரடி சோதனை மேற்கொள்வார்கள். தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாட்டில் வைத்துள்ள வியாபாரிகள் மீது நடவடிக்கை  மேற்கொள்ள இருக்கிறார்கள். பிளாஸ்டிக்கால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதால் அதை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ள நிலையில், தடை உத்தரவை அமல்படுத்தும் ஆரம்பகட்டத்தில் 10 ஆயிரம் தனிப்படைகள் அமைத்து கண்காணித்து வியாபாரிகளிடையே ஒருவித பீதியையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

இந்த கண்காணிப்பும், சோதனையும் வழக்கமாக நீடிக்க வேண்டும். அப்போது தான் பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடியும். தடை உத்தரவு பிறப்பித்துவிட்டோம், இரண்டு நாள் அதை கண்காணித்தோம், நூறு பேருக்கு அபராதம் விதித்தோம். அத்துடன் அதை மறந்துவிட்டோம் என்று செயல்பட்டால், இந்த தடை உத்தரவால் மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ எந்த பயனும் ஏற்படாது. பிளாஸ்டிக் தடையை கண்காணிக்கவும், அந்த உத்தரவை அமல்படுத்தவும் நிரந்தரமாக உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும். இவர்கள் சந்தை, வியாபார நிறுவனங்கள், காய், கனி மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தொடர்ந்து சோதனையில் ஈடுபட வேண்டும். மேலும்  மக்களிடையே, வியாபாரிகளிடையே தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது தான் மக்கள் முற்றிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டில் இருந்து மாறுவார்கள். இது போல இல்லாமல், உத்தரவை நீர்த்து போக செய்தால், ஹெல்மெட் அணியால் இருசக்கர வாகனம் ஓட்டுதல் போன்ற முக்கிய தடை உத்தரவு போன்று  பிடிபடும் போது அபராதம் கட்டி கொள்ளலாம் என்ற மனநிலைக்கு மக்களோ, வியாபாரிகளோ வந்து விடக்கூடாது. மேலும் கள்ளசந்தையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்குகள் விற்பனை, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை விற்பனைகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது.

சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என்ற உறுதி மக்களிடையே ஏற்பட வேண்டும். காய்கறி, மளிகை சாமான்கள் ஆகியவற்றை சணல் பை, துணிப்பையில் வாங்க வேண்டும். டீ, காபி ஆகிவற்றை தூக்குசட்டியில் வாங்க பழக வேண்டும். ஓட்டல்களில் சிற்றுண்டியை மந்தார இலை, வாழையிலையில் வைத்து தர பழகிக்கொள்ள வேண்டும். அதாவது பழைய நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். வியாபாரிகள் அதை மறுக்கும்பட்சத்தில் மக்கள் அந்த கடைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்கள் நிச்சயம் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திக்  கொள்வார்கள். எனவே, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை அரசு தீவிரமாக செயல்படுத்த வியாபாரிகளும், மக்களும்
ஒத்துழைப்பு அளித்து நமது உடல்நலம், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்