SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நியாயம் கிடைக்குமா?

2018-12-26@ 04:09:06

காவிரியில்  கர்நாடக அரசு, எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து  தமிழகம் மற்றும் புதுவை மாநில அரசுகளின் கருத்தை கேட்கவேண்டும் என  காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேகதாது அணை  விஷயத்தில் தமிழகம், புதுவை மாநில ஒப்புதல் பெறவில்லை என்பதை காரணம்  காட்டி, மத்திய அரசு, கர்நாடக அரசின் அறிக்கையை நிராகரித்திருக்க வேண்டும்.  அதை விடுத்து, கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று, ஆய்வுசெய்ய அனுமதி  அளித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த அனுமதி, தமிழக நலனுக்கு எதிரானது. அதனால், மத்திய அரசை கண்டித்து தமிழக அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி வருகின்றன.

இந்த விவகாரம், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குளிர்கால  கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி துவங்கி, நடந்து வருகிறது. திமுக, அதிமுக  எம்.பி.க்கள், அவை நடவடிக்கைகளை  புறக்கணித்து தங்களது எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். மேகதாது விவகாரம் தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி  வருகின்றனர். ஆனால், இக்கோரிக்கை ஏற்கப்படவில்ைல. இதனால், இரு அவைகளிலும் அமளி நீடிக்கிறது. இரு அவைகளும் அடுத்தடுத்து முடங்குகின்றன.  திமுக., அதிமுக எம்.பி.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக எம்.பி.க்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், ‘‘காவிரி டெல்டா விவசாயிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ள மாட்டோம். தமிழகத்தின் அனுமதியில்லாமல் மேகதாது அணை  கட்ட முடியாது. இதுதொடர்பாக, தமிழக எம்பிக்கள் என்னை சந்தித்து  பேசலாம்.  நாடாளுமன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தாருங்கள்’’ என கூறியுள்ளார். மத்திய அரசு விரிக்கும் இந்த வலையில் தமிழக எம்.பி.க்கள் விழுந்து விடக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. காவிரி நீரை திறக்கும்படி உச்சநீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும் அதை கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. அப்போது மத்திய அரசு, கர்நாடக அரசிடம் பேசி, தமிழகத்துக்கு காவிரி நீரை பெற்றுத்தரவில்லை. இந்த விஷயத்தில் நடுநிலை வகிக்கவில்லை.

அப்போது வாய்மூடி மவுனமாக இருந்த மத்திய அரசு, தற்போது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தை வளைக்க முயல்கிறது. இது, தமிழக மக்களுக்கும், ெடல்டா விவசாயிகளுக்கும் இழைக்கப்படும் மாபெரும் துரோகம். ‘’கடைமடை மாநிலங்களான தமிழகம்-புதுவை மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று வாருங்கள்’’ என கர்நாடக அரசு தாக்கல் செய்துள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு திருப்பி அனுப்பவேண்டும். இதுவே, நடுநிலையான நடவடிக்கை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

 • syriaairstrike

  சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

 • boliviafire

  பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

 • russiatomatofight

  ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்