SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அபாய அறிவிப்பு

2018-12-25@ 00:12:34

தமிழக சமூக நலத்துறை ஆணையர் அமுதவல்லி, அனைத்து மாவட்ட கலெக்டர் களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை தமிழக மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ``25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவான  எண்ணிக்கையில் பயனடைந்து வரும் சத்துணவு மையங்களை மூடிவிட்டு, அந்த மையங்களில் பயனடைந்து வரும் மாணவர்களுக்கு அருகே உள்ள  சத்துணவு மையங்களில் இருந்து உணவு சமைத்து பரிமாறவேண்டும். அவ்வாறு ஏற்பாடு செய்யும் பட்சத்தில் அம்மையங்களில் ஒரு சமையல் உதவியாளரை மட்டும் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கவேண்டும். அந்த மையங்களில் சத்துணவு அமைப்பாளர் பணியாற்றி வந்தால், சத்துணவு அமைப்பாளர் பணியிடம் காலியாக உள்ள மையங்களுக்கு பணி மாறுதல் செய்ய வேண்டும். இப்பணிகளை டிசம்பர் 28ம் தேதிக்குள் முடித்து  அறிக்கையை அனுப்பவேண்டும்,’’ என்று அவரது அறிக்கை கூறுகிறது.இதன்படி, தமிழகத்தில் உள்ள 8 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட அரசு திட்டமிட்டுள்ளது. ஆட்குறைப்பு நடவடிக்கை  செய்வதற்கான அரசாணை (56) மூலம் முதலில் சத்துணவுத்துறையில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அரசு துவக்கியுள்ளது. இதன் மூலம்  சத்துணவுத்துறையில் பணியாற்றும் பெண்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்தத்துறையில் ஏற்கனவே, ஏராளமான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 1,400க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. கடந்த மே 17ம் தேதி  நேர்முகத்தேர்வு நடத்தியும் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. இதேபோல தமிழகம் முழுவதும் பல ஆயிரக்கணக்கான  பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளநிலையில், ஆட்குறைப்பு செய்ய நடவடிக்கை  துவங்கியுள்ளது. மேலும், மூடப்படும் சத்துணவு மைய
குழந்தைகளுக்கு வெளி இடங்களிலிருந்து சத்துணவு சமைத்துக் கொண்டு வருவது உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. இதனால், குழந்தைகளுக்கு உரிய முறையில் உணவு கிடைக்காத நிலையும் ஏற்படும். சமீபத்தில் உலக பட்டினி குறியீடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. 119 நாடுகளில் சர்வே நடத்தப்பட்டதில், இந்தியா 103வது இடத்தைப்  பிடித்துள்ளது. இந்தியாவில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அதாவது, இந்தியாவில் 5  குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லையென்றும், அந்தக் குழந்தையும் தனது உயரத்திற்கு ஏற்ற எடையில்  இல்லையென்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடு என பெருமை கொள்ளும் இந்தியா, கடந்த ஆண்டை காட்டிலும் தரவரிசை பட்டியலில்  இந்த ஆண்டு மேலும் 3 இடங்கள்  கீழிறங்கியுள்ளதையும் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில் தான், 8 ஆயிரம் சத்துணவு மையங்களை மூட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை எதிர்த்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் டிசம்பர் 27ம் தேதி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.  அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் மத்திய அரசு வழங்க வேண்டிய 1,500 கோடி ரூபாயில் இதுவரை 102 கோடி ரூபாய் மட்டுமே வழங்கியுள்ளது.  அதேபோல கடந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மதிய உணவு திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ஒதுக்கிய மத்திய அரசு, இந்த பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி  ரூபாயை ஒதுக்கியுள்ளது. அள்ளிக்கொடுக்க வேண்டிய நிதியை கிள்ளிக்கொடுக்கும் மத்திய அரசைக் கண்டிக்க முடியாத தமிழக அரசு, தற்போது 8  ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சத்துணவு மையங்களை மூடும் முடிவை உடனே அரசு கைவிட  வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்