SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தனிநபர் உரிமை பறிப்பு?

2018-12-23@ 02:22:03

நா ட்டில் உள்ள எந்த கம்ப்யூட்டரிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் பெறப்படும், அனுப்பப்படும், உருவாக்கப்படும் தகவல்களை இடைமறித்து மத்திய உளவுத்துறையினர் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் பார்க்கவும், சோதனையிடவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் காக்க வேண்டிய அவசியம் என்றால், இதுபோன்ற உத்தரவுகளை அரசு பிறப்பிக்கலாம் என அந்த சட்டத்தின் விதிமுறையில் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்தரவு என்றாலும், இதன் மூலம் தனி நபரின் தனிப்பட்ட விவரங்கள் வேவு பார்க்கப்படுவதோடு, தனி மனித சுதந்திரமும் பாதிக்கப்படும் என கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தியாவை கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்கிய நாடாக மாற்றிவிட்டதாக பிரதமர் மோடி அரசின் மீது குற்றம்சாட்டி உள்ளன. இந்த நடவடிக்கை ‘‘இந்தியர்கள் அனைவரையும் ஏன் கிரிமினலாக பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவரையும் வேவு பார்க்கும் இந்த உத்தரவு ஏற்க முடியாதது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது’’. ‘‘சட்டத்தில் கண்காணிப்பு போர்வை என்பது மோசமானது. இது தேசத்தின் பாதுகாப்புக்காக என்றால், அந்த நோக்கத்திற்காகத்தான் ஏற்கனவே மத்திய அரசு இயந்திரங்கள் இருக்கின்றனவே. பொது மக்களே தயவுசெய்து கருத்தை சொல்லுங்கள்...’’ எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நீண்ட வரலாறும் பாரம்பரியமும் கொண்ட நமது நாடு, உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றுள்ளது. இந்த ஜனநாயக நாட்டில் தற்போது அசாதாரணமான சூழல் நிலவுகிறது. தனிநபர் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்பது எப்போதும் இல்லை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேவேளையில், பாதுகாப்பு என்ற பெயரில் தனிமனித உரிமைகளை பறிக்கும் செயலில் இறங்கக்கூடாது. சந்தேகப்படும் நபர், அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கவும் அதிரடி சோதனைகள் நடத்தவும் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மேற்கொள்ளலாம். ஆனால், பொதுவான அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட இதுபோன்ற அதிரடி கண்காணிப்பு நடவடிக்கை என்பது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வகையில் எதிர்க்கட்சி
களின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை என்று பல்வேறு அமைப்புகளை சுயநல போக்கில் தவறாக அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுகின்றன. இதற்கு நீதிமன்றம் மூலமே தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது, கேள்வி கேட்பாரின்றி நாட்டையே கண்காணிப்பு வளையத்துக்குள் சிக்க வைப்பது என்பது முதிர்ந்த ஜனநாயக நாட்டில் ஏற்புடைய செயல் அல்ல என்பதே சமூக நலனில் அக்கறையுள்ளவர்களின் கருத்தாக உள்ளது. இதில் நியாயமும் உள்ளதை புரிந்து கொண்டால் சரி.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • srilanka_chri11

  கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

 • india_medals11

  ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

 • pudin_russiaa1

  வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்