SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசத்தல் எலெக்ட்ரிக் கார்

2018-12-23@ 00:30:40

இந்தியாவை எடுத்துக்கொண்டால் தற்போதைக்கு மஹிந்திரா மற்றும் டாடா போன்ற ஒருசில நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து வருகின்றன. ஆனால், இந்த வாகனங்களின் ‘’ரேஞ்ச்’’ மிகவும்  குறைவாக இருப்பது ஒரு குறையாக கருதப்படுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் எவ்வளவு தூரம் பயணிக்கலாம் என்பதே ‘’ரேஞ்ச்’’ என்று குறிப்பிடப்படுகிறது. அத்துடன் இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் எலெக்ட்ரிக்  வாகனங்களின் பெர்பார்மென்ஸ் சர்வதேச தரத்திற்கு இல்லை எனவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பில் வெகுவாக முன்னேறி விட்டன.  டெஸ்லா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் அதிக ரேஞ்ச் கொண்டவை. இதில், பாதுகாப்பு விஷயங்களுக்கும் பஞ்சம் இல்லை.

அனைத்து குறையை களையும் விதமாக எலெக்ட்ரிக் கார் ஒன்றை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா நிறுவனம் எஸ்201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் எஸ்யூவி ரக  கார் ஒன்றை விரைவில் அறிமுகம் செய்கிறது. அதன்பின் எஸ்201-ஐ அடிப்படையாக கொண்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார்,  ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது. 2016ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் இ2ஓ ஸ்போர்ட் (e2o Sport) என்ற எலெக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் முதல் முறையாக  காட்சிக்கு வைத்திருந்தது. இதில், 380வி (380V) பேட்டரி சிஸ்டம் பொருத்தப்பட்டிருந்தது. இதன் ரேஞ்ச் 200 கி.மீ. மஹிந்திரா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்ய உள்ள எலெக்ட்ரிக் காரிலும் இதே பேட்டரி சிஸ்டம்தான்  பொருத்தப்படும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் ஒருமுறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ தூரம் பயணிக்கும் வகையில் சில மாற்றங்கள் செய்யப்படும். எனவே, மிகவும் அதிக ரேஞ்ச் கொண்ட மஹிந்திரா  நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் என்ற பெருமையை இது பெறும்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கார் வரும் 2020ம் ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. தற்போது எலெக்ட்ரிக் எஸ்-201 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் இந்த காரில், சாங்யாங் டிவோலி காரை அடிப்படையாக  கொண்ட அம்சங்களும் இடம்பெற்றிருக்கும். சாங்யாங் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றுதான் டிவோலி. கொரியாவை சேர்ந்த சாங்யாங் கார் நிறுவனத்தை இந்தியாவின் மஹிந்திரா குழுமம்  நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய எலெக்ட்ரிக் எஸ்-201 எஸ்யூவி ரக கார், புனேவுக்கு அருகே சகான் என்ற இடத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இதனிடையே  சகான் தொழிற்சாலையில்,

எலெக்ட்ரிக் கேயூவி 100 காரின் அசெம்ப்ளிங், வெகு விரைவில் துவங்கப்பட உள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் முதன்மையான கார்களில் ஒன்று கேயூவி 100. இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை 2019ம் ஆண்டின் மத்தியில்  மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்தியாவில் தரமான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க தொடங்கியிருப்பதற்கான அறிகுறிதான் இது. இப்புதிய எஸ்-201 எலெக்ட்ரிக் காரின் விலை 20 லட்சம்  ரூபாய்க்குள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பொதுமக்களுக்கு பேம் இந்தியா திட்டத்தின் மூலமாக மானியம் வழங்கப்படுகிறது. மானியம் கிடைப்பதால், எலெக்ட்ரிக்  வாகனங்களை வாங்கவேண்டும் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிக்கும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-03-2019

  23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • SuperWormMoon

  2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

 • sharkpalne

  உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

 • iraqnewyear

  ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

 • iraqboatacc

  ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்