SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைகிறது : இரட்டைபடை மதகுகளுக்கு விரைவில் தண்ணீர் திறப்பு

2018-12-19@ 12:00:00

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 28ம் தேதி வாய்க்கால் பாசனத்திற்கு கெடு முடிந்த நிலையில் கடைமடை பகுதியில் நெல்பயிர் களையெடுக்கும் பருவத்தில் உள்ளதால் பாசனத்திற்கு நீர்திறப்பு காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தற்போது நீர்திறப்பு டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணைக்கு நீர்வரத்து நேற்றுமுன்தினம் 1012 கனஅடியாக நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 612 கன அடியாக குறைந்தது.  அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 95.31 அடியாகவும் நீர் இருப்பு 25.2 டிஎம்சி யாகவும் உள்ளது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக 200 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இம்மாதம் 28 ம் தேதி கீழ்பவானி வாய்க்கால் ஒற்றைப்படை மதகு பாசனத்திற்கு நீர் நிறுத்தப்படுவதோடு 2019 ஜனவரி முதல் வாரத்தில் கீழ்பவானி வாய்க்கால் இரட்டைப்படை மதகுகளுக்கு புன்செய் பாசனத்திற்காக நீர் திறக்க அரசாணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்