SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு : சாலையில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

2018-12-19@ 11:54:36

சேலம் : சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் நூற்றுக்கணக்கானோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்திலிருந்து சென்னைக்கு 277 கி.மீட்டருக்கு 8 வழிச்சாலைக்கு அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார். இதையடுத்து சுமார் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த மே மாதம் முதல் தொடங்கப்பட்டது. விளைநிலங்களில் விவசாயிகளின் அனுமதியின்றி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றதால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனிடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் செப்டம்பர் 15ம் தேதி இடைக்கால தடை விதித்தது உத்தரவிட்டது. அதன்படி நிலம் கையகப்படுத்தும் பணிகள், உள்ளிட்ட எவ்வித பணிகளும் மேற்கொள்ளக்கூடாது என கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து டிச.,1ம் தேதி மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட புதிய அறிவிப்பில் 8 வழிச்சாலை விரிவாக்க பணிக்காக மேலும் நிலங்கள் கையப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் ஆட்சபேனம் உள்ளவர்கள் ஆட்சபேன மனுவை ஒரு மாதத்திற்குள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்ட விவசாயிகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் காவல்துறையினர் தடுத்ததையடுத்து அவர்கள் அங்கேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசிய விவசாயிகள், சென்னை-சேலம் 8 வழிச்சாலை பசுமை சாலையல்ல, பசுமையை அழிக்கும் சாலை என்று கூறியுள்ளனர். ஏற்கனவே சேலத்திலிருந்து சென்னை செல்ல 3 சாலைகள், விமான நிலையம், ரயில் வழித்தடம் இருக்கும் நிலையில் 8 வழிச்சாலை எதற்கு என விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் 90 மீட்டர் இடைவெளிக்கு நிலம் எடுக்கப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது அதனை விரிவாக்கம் செய்ய மேலும் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு 89 சதவிகிதம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டியில் கூறியிருந்த நிலையில், இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நூறு சதவிகித மக்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று அவர்கள் கூறியுள்ளனர். மேலும் கார்பரேட் கம்பெனிகளுக்கு துணை போகும் அரசாக எடப்பாடி பழனிசாமி அரசு செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்