SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓசூர் அருகே உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டம்

2018-12-19@ 11:42:33

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் ஏரியில் கலப்பதை தடுக்கக் கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓசூர் பேடரப்பள்ளியில் உள்ள ஏரியில் ரசாயன கழிவுகள் கலப்பதால் தண்ணீர் மாசடைந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏரியில் கலக்கும் ரசாயன கழிவுகளால் நிலத்தடி நீரும் மாசுபட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். ரசாயன கழிவுகளை ஏரியில் விடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், செடி, கொடிகள் மண்டிக்கிடக்கும் பேடரப்பள்ளி ஏரியை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்