SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2வது டெஸ்ட்: ஆஸியிடம் சரணடைந்தது இந்தியா...... 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி

2018-12-18@ 08:57:00

பெர்த்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளிடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் நடந்து வருகிறது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி அபாரமாக வென்று 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 283 ரன் எடுத்து ஆல் அவுட்டானது.

கேப்டன் கோஹ்லி அதிகபட்சமாக 123 ரன் விளாசினார். இதையடுத்து, 43 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து, 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. லோகேஷ் ராகுல், முரளி விஜய் இருவரும் துரத்தலை தொடங்கினர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 4வது பந்தில் ராகுல் டக் அவுட்டாகி வெளியேற, இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.

அடுத்து வந்த புஜாரா 4 ரன் மட்டுமே எடுத்து ஹேசல்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பெய்ன் வசம் பிடிபட்டார். இந்தியா 13 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், விஜய் - கேப்டன் கோஹ்லி ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடியது. கோஹ்லி 17 ரன், விஜய் 20 ரன் எடுத்து லயன் சுழலில் அடுத்தடுத்து வெளியேற, இந்தியா 55 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து விழி பிதுங்கியது. இந்த நிலையில், துணை கேப்டன் ரகானே - ஹனுமா விஹாரி இருவரும் நம்பிக்கையுடன் விளையாடி ரன் சேர்த்தனர். இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 43 ரன் சேர்த்தது. சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த ரகானே 30 ரன் எடுத்து (47 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த விஹாரி 28 ரன்களிலும், பன்ட் 30 ரன்களிலும் ஆட்டமிழந்ததால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. பின்வரிசை வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து, ஆஸியிடம் படுதோல்வி அடைந்தது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் வருகிற டிச.26-ம் தேதி தொடங்க உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்