SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரை சதம்: ஷாய் ஹோப் அசத்தல்

2018-12-18@ 00:15:26

சில்ஹெட்: வங்கதேச அணியுடன் நடந்த முதல் டி20 போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 16 பந்தில் அரை சதம் விளாசினார். சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 19 ஓவரில் 129 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஷாகிப் ஹசன் 61 ரன் (43 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்), ஆரிபுல் ஹக் 17, மகமதுல்லா 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். காட்ரெல் 4 ஓவரில் 28 ரன்னுக்கு 4 விக்கெட் கைப்பற்றினார்.

அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 10.5 ஓவரிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து அபாரமாக வென்றது. எவின் லூயிஸ் 18, ஷாய் ஹோப் 55 ரன் (23 பந்து) விளாசி ஆட்டமிழந்தனர். ஹோப் 16 பந்தில் அரை சதம் (3 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி, யுவராஜ் (12 பந்து), கோலின் மன்றோவுக்கு (14 பந்து) அடுத்த இடத்தை பிடித்தார். காட்ரெல் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 2வது டி20 போட்டி 20ம் தேதி நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்