SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிளாஸ்டிகிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனு : தமிழக அரசுக்கு நோட்டீஸ்

2018-12-17@ 17:35:33

சென்னை : தமிழகத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 2019ம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்து கடந்த ஜூன் 25ம் தேதி  தமிழக அரசு சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி இ-பேக் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மக்கக்கூடிய பாலி ப்ரொப்லைன் பைகளுக்கும் சேர்த்து அரசு தடை விதித்திருப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மருத்துவம் மற்றும் தொழில் பயன்பாட்டிற்கு இந்த வகை பைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அதனால் இந்த பாலி ப்ரொப்லைன் பைகளுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும் மனுவில் கோரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் மாதம் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • aalangatty_kanamalai11

    டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

  • northensnow

    பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • baloon_worstand

    ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

  • redmoon_lunar12

    சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

  • 22-01-2019

    22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்