SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது: சென்னை ஐகோர்ட் திட்டவட்டம்

2018-12-17@ 12:16:07

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுவதால் சில்லறை வியாபாரம் பாதிக்கப்படுகிறது. மேலும், பதிவு செய்யப்படாத கடைகள் மூலம் மருந்து விற்பனை செய்யப்படுகிறது. காலாவதியான, போலியான மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்பிருக்கிறது. மருத்துவர்கள் அளிக்கும் மருந்து சீட்டில்லாமல் விதிமீறி மருந்துகள் விற்கப்படுகின்றன. எனவே இதனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை கடந்த அக்டோபர் மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதுகுறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்நிலையில், இதுகுறித்த விசாரணை உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது ஆன்லைன் மருந்து விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்றும், வரும் ஜனவரி 31-ம் தேதிக்குள் வரைவு விதிமுறைகளை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும்  விதிமுறைகள் வகுக்கும் வரை ஆன்லைன் மூலம் மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்