SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவரம் அருகே வீட்டில் கள்ளநோட்டு அச்சிட்ட 3 பேர் கைது: டாஸ்மாக் கடையில் மாற்றியபோது பிடிபட்டனர்

2018-12-17@ 01:58:46

திருவொற்றியூர்: மாதவரம் அருகே வீட்டில் கள்ளநோட்டு அச்சிட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  மாதவரத்தை சேர்ந்தவர் முத்து. மூலக்கடை டாஸ்மாக் கடையின் விற்பனையாளர். இங்கு, நேற்று மாலை ஒரு வாலிபர் ரூ.500 நோட்டை கொடுத்து மது கேட்டுள்ளார். அந்த நோட்டை முத்து வாங்கி பார்த்தபோது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில், மாதவரம் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மூட்டை தூக்கும் தொழிலாளி சுப்பிரமணி (28) என்பதும், பணம் தேவைப்பட்டதால் மாதவரம் வினோபா நகரை சேர்ந்த ஹசீனா பேகம் (30) என்பவரிடம் கடன் கேட்டதாகவும், அவர் பாடி எஸ்.ஏ காலனியை சேர்ந்த தனது உறவினர் சாகுல்அமீது (40) என்பவரிடம் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதில் இருந்து ரூ.500 கொடுத்து மது வாங்கியதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் ஹசீனா பேகம் மற்றும் சாகுல்அமீதை பிடித்து விசாரித்தனர். அதில், ஆட்டோ டிரைவரான சாகுல் ஹமீத் விபத்தில் காயமடைந்து நடக்க முடியவில்லை. குடும்பம் நடத்த பணம் தேவைப்பட்டதால் கள்ளநோட்டு அடிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி ரூ.500 நோட்டை எடுத்து சுமார் ரூ.70 ஆயிரத்துக்கு மெஷின் மூலம் கள்ளநோட்டு அச்சடித்து ஹசீனா  பேகம் மூலம் சுப்பிரமணியத்திற்கு கொடுத்துள்ளார். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள், வேறு யாருடனாவது தொடர்பில் உள்ளார்களா? என்ற கோணத்தில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SiberiaPolarBearStreet

    ரஷ்யாவில் உணவைத் தேடி நூற்றுக்கணக்கான கி.மீ. தூரம் இடம்பெயர்ந்த பனிக்கரடி: அலைந்து திரிந்து சோர்ந்து படுத்த பரிதாபம்!

  • RahulBirthday2k19

    கட்சி பிரதிநிதிகளுடன் உற்சாகமாக பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி: புகைப்படங்கள்

  • GrassBridgePeru

    ஆண்டுதோறும் காய்ந்த புற்களை கொண்டு கட்டப்படும் தொங்கு பாலம்..: மலைத்தொடரை இணைக்க உயிரை பணயம் வைக்கும் மக்கள்!

  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்