SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் பாரை சூறையாடிய 9 பேர் கைது

2018-12-17@ 01:58:45

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை  சேர்ந்தவர் வடிவேல் (35). ெசன்னை நெற்குன்றம் ரெட்டி தெருவில் உள்ள  டாஸ்மாக் பாரில்  வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இவர் பாரில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த 9 வாலிபர்கள், மதுபானம் வேண்டும், என வடிவேலிடம் கேட்டுள்ளனர். அப்போது, ‘‘மதியம் 12  மணிக்கு தான் டாஸ்மாக் கடை திறக்கப்படும். தற்போது எங்களிடம் மதுபானம் இல்லை,’’  என்று கூறியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த 9 பேரும் வடிவேலை  தாக்கி, பாரில் இருந்த மேஜை மற்றும் நாற்காலிகளை அடித்து உடைத்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து பார் ஊழியர் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை  நடத்தினர். அதில், நெற்குன்றத்தை சேர்ந்த ராஜூ (28), பிரிதிவி ராஜ் (24), சாமுவேல் (21),  அருண் (28), பூபதிராஜ் (27), பிரவின்குமார் (24), ஆர்.அருண் (22),  பிரசன்னா (19), யோபுராஜ் (28) ஆகியோர் டாஸ்மாக் பாரை சூறையாடியது தெரியவந்தது. அவர்கள் 9 பேரையும்  போலீசார் கைது செய்தனர்.

* விருகம்பாக்கத்தை சேர்ந்த ஓய்வுபற்ற அரசு அதிகாரி தமிழ்மணி (72), தனது மனைவியின் 6 சவரன் செயினை ஒரு பையில் வைத்து கொண்டு நேற்று முன்தினம் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றபோது, 2 பெண்கள் அவரிடம் இருந்த நகை பையை அபேஸ் செய்துகொண்டு தப்பினர்.
* தரமணியில் பெண்ணிடம் வழிப்பறி  செய்த  பெருங்குடி கல்லுக்குட்டையை சேர்ந்த டில்லிபாபு (21), சென்ஜோன் (21)  ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 22 சவரன்  நகைகளை பறிமுதல் செய்தனர்.
* வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பெரியசாமி (74) என்பவர், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் கொசுவர்த்தி கொளுத்தி வைத்துவிட்டு குடும்பத்துடன் தூங்கினார். நள்ளிரவில் கொசுவர்த்தி சரிந்து விழுந்ததில் குடிசையில் தீப்பிடித்தது. உடனடியாக, அவர் குடும்பத்துடன் வெளியே ஓடிவந்தார். இதில், குடிசை முழுவதும் எரிந்து சாம்பலானது.
* பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (47) மது போதையில் வீட்டின் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்தார்.
* புழல் லட்சுமிபுரம் பெருமாள் கோயில்  தெருவை சேர்ந்தவர் கணேசன். புதுவை ஐஐடி ஊழியர். இவரது மனைவி திவ்யா (25).  திருமணமாகி 8 மாதம் ஆகிறது. இருவருக்கும் இது, 2வது திருமணம். நேற்று  முன்தினம் இரவு திவ்யா திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு  தற்கொலை செய்துகொண்டார்.
* ஜல்லடியன்பேட்டை புதுநகர் 2வது தெருவை சேர்ந்த ஆண்டாள் (80) புது நகர் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று நடந்து வந்தபோது, பைக் மோதியதில் மூதாட்டி இறந்தார்.

சாம்பாரில் தவறி விழுந்த குழந்தை பரிதாப பலி
பாரிமுனை சிங்கர் தெரு குடிசை பகுதியை சேர்ந்தவர் முருகன் (27). இவரது மனைவி சூர்யா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவர்களது உறவினர் மகேஷ்வரி என்பவர், அதே பகுதியில் டிபன் கடை நடத்துகிறார். இங்கு நேற்று முன்தினம் மதியம் சாம்பார் தயாரித்து, கீழே இறக்கி வைத்தனர். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த முருகனின் குழந்தை பூமிகா (2) திடீரென சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்து அலறி துடித்தது. பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை பலியானது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • aalangatty_kanamalai11

  டெல்லியில் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை காரணமாக போக்குவரத்து முடக்கம்

 • northensnow

  பனிப்பொழிவால் உறைந்த வட மாநிலங்கள் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

 • baloon_worstand

  ஆந்திராவின் அரக்கு பகுதியில் சர்வதேச பலூன் திருவிழா : பிரமாண்ட வண்ண பலூன்களால் பார்வையாளர்கள் பரவசம்

 • redmoon_lunar12

  சிவப்பு நிறத்தில் காட்சியளித்த நிலவு! : வானில் தோன்றிய முழு சந்திர கிரகணம்

 • 22-01-2019

  22-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்