SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருகிய நிலையில் சடலம் மீட்பு லோடு வேன் டிரைவர் எரித்து கொலையா? போலீஸ் விசாரணை

2018-12-17@ 01:58:43

பூந்தமல்லி:  பூந்தமல்லி  அடுத்த பெங்களூர் நெடுஞ்நெடுஞ்சாலையில் உள்ள பாப்பான்சத்திரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஒரு லோடு வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வேனின் முன்பகுதி திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர் கள் தீயை அணைத்தனர். வேனுக்குள் உடல் கருகிய நிலையில் டிரைவர் சடலமாக கிடந்தார்.    நசரத்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து  வேனின் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில், சென்னை அயனாவரத்தை சேர்ந்த ஜானகிராமன் என்பவருக்கு சொந்தமான வேன் என்பது தெரியவந்தது.

மேலும், அந்த வேனை ஓட்டேரி செல்வப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதிகேசவன்(24) என்பவர் 2 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து தொழில் செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், அவர் நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி அருகே லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்த போது சாலையோரம் வேனை நிறுத்தியுள்ளார். அப்போது தான் வேன் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. வேனில் தீப்பிடித்ததும் தப்பிக்க அவர் ஏன் முயற்சி செய்யவில்லை?  டிரைவர் சீட் பக்கம் கதவு திறக்கமுடியாமல் போன காரணம் என்ன?. யாராவது அவரை உள்ளே வைத்துப் பூட்டி தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-09-2019

    17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • dragan_canadaa

    கனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்

  • gurgaun_cameraa1

    குர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்

  • apayin_kuppai11

    ஸ்பெயினில் வரலாறு காணாத கனமழை : வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கார்கள் குப்பை போல குவிந்துள்ள அவலம்

  • protest_dailymail111

    சீனாவின் இலையுதிர்கால திருவிழா :மலைகளில் ‘போராட்டம் சார்ந்த வாசகத்துடன்’ விளக்குகளை ஏற்றிய ஹாங்காங் போராட்டக்காரர்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்