SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரபல ரவுடியை கொல்வதற்கு திட்டம் தீட்டிய 4 பேர் கைது: 8 பட்டாக்கத்தி, 2 கார்கள் பறிமுதல்

2018-12-17@ 01:40:43

பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு காவல் சரகத்தில், ரவுடிகள் சிலர் குற்ற சம்பவத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக, இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே புளியந்தோப்பு முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் புளியந்தோப்பு டிமிலர்ஸ் சாலை பாப்பாரோடு சுடுகாடு அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி சென்ற வாலிபரை பிடித்தனர். விசாரணையில் அவர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பதும், கே.கே.நகரில் கதிரவன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்பதும், புழலில் 30 சவரன் கொள்ளையில், தொடர்பு உடையவர் என்பதும் தெரிய வந்தது.

மேலும், விசாரணையில் பூந்தமல்லியில் கொலை செய்யப்பட்ட ரவுடி சின்னாவின் கூட்டாளியாக சரவணன் இருந்துள்ளார். சின்னா உயிருடன் இருந்தபோது மற்றொரு ரவுடியான ஆற்காடு சுரேஷ் என்கிற ரவுடிக்கும், சின்னாவுக்கும் இடையில் மோதல் இருந்துள்ளது. இதனால் சரவணன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆற்காடு சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, புதிதாக 8 பட்டா கத்தி வாங்கி உள்ளனர். மேலும் 2 கார்கள் வாடகைக்கு எடுத்துக்கொண்டு அயனாவரம் பகுதியில் தனது நண்பரான குமார் என்ற குங்பூ குமாரின் பிறந்த நாள் விழாவுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, போலீசாரிடம் சிக்கியதும் விசாரணையில் ெதரிய வந்தது.

இதையடுத்து சரவணனுக்கு கத்தி வாங்கி கொடுத்த புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சிவா (25), பட்டாளம் பகுதியை சேர்ந்த கோபால் (34), ரமேஷ் (32) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 8 பட்டாக் கத்தி, 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனின் கூட்டாளிகளான மாதவரத்தை சேர்ந்த சீனிவாசன், தாவூத், ராஜேஷ் ஆகியோரை தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 29-05-2020

    29-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 28-05-2020

    28-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2020

    26-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-05-2020

    25-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-05-2020

    24-05-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்