SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதியவரிடம் நகை பறிப்பு

2018-12-17@ 01:40:40

சென்னை: ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகரை சேர்ந்தவர் மூர்த்தி (66). இவர் நேற்று அதிகாலை அசோக் நகர் முதல் அவென்யூவில் உள்ள இந்திரா நகரில் வீடுகளுக்கு பால் பாக்கெட் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர் ஒருவர் மூர்த்தியை வழிமறித்து, ‘‘நான் போலீஸ். காசி தியேட்டர் பாலம் அருகே உதவி ஆய்வாளர் ஒரு போட்டோ வைத்துள்ளார். அதை பார்த்து அடையாளம் காட்ட வேண்டும்,’’ என்று ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். ஆட்டோ பாலத்தின் அருகே சென்றபோது மூர்த்தியை மிரட்டி, அவர் அணிந்து இருந்த அரை சவரன் மோதிரம், ₹1,500 பணத்தை பறித்து கொண்டு அந்த நபர் தப்பினார்.புகாரின் பேரில் குமரன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்