SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சை அருகே போலி மதுபானம் தயாரித்த 2 பேர் பிடிபட்டனர்

2018-12-17@ 01:14:32

தஞ்சை: தஞ்சை- நாஞ்சிக்கோட்டை சாலை ஆசிரியர் காலனி  விரிவாக்கம் ரியாஸ் நகரில் போலி மதுபான தொழிற்சாலை செயல்படுவதாக தனிப்படை  போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. இதையடுத்து அந்த பகுதியில்  போலீசார் அதிரடியாக  சோதனை நடத்தினர். அப்போது ஒரத்தநாடு மேலத்தெருவில் ஒரு வீட்டை கடந்த 2  மாதத்துக்கு முன் சிலர் வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயார் செய்வது  கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அங்கு  இருந்த தஞ்சை கீழவாசலை சேர்ந்த பாலாஜி  (35), தினேஷ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 4,000  மதுபாட்டில், கேன்களில் இருந்த 11,000 லிட்டர் ஸ்பிரிட், மதுபானம் தயார்  செய்து அதை மூடும்  இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.

பின்னர் நடத்திய  விசாரணையில், பாலாஜியின் உறவினரான மதுரை மாவட்டம் வீரடிப்பத்து பகுதியை  சேர்ந்த அங்குசாமி என்பவர், மதுரையில் போலியாக தயார் செய்யும் மதுபானங்களை  தஞ்சையில் கொண்டு வந்து கடந்த  சில மாதங்களாக விற்பனை செய்து வந்தார்.  மதுரையில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்வது கஷ்டமாக இருந்ததால்  தஞ்சையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி மதுபானம் தயாரித்து விற்பனை  செய்துள்ளனர் என்று தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் உள்ள அங்குசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்