SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து குழந்தை, கணவரை கொன்றுவிடுவதாக மிரட்டி 80 பெண்கள் பலாத்காரம்

2018-12-17@ 00:16:24

* ஐடி வாலிபர் கைது * கொள்ளை பணத்தை ‘பெட்’டில் கொட்டி பெண்களுடன் ‘ஜாலி’

சென்னை: ஸ்குரூ டிரைவர் மூலம் கதவை திறந்து படுத்திருக்கும் பெண்களை வாய்பொத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, அதை படமாக எடுத்து நகைகளை கொள்ளைடியத்த எம்பிஏ படித்த ஐடி வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுவரை 80 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக விசாரணையில் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளான். கொள்ளையடித்த பணத்தை கட்டிலில் கொட்டி பெண்களுடன் ஜாலியாக இருப்பது தனி சுகம் என்றும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த சம்பவத்தால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், ஜெ.ஜெ. நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்வதாகவும், நகைகளை திருடி செல்வதாகவும் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. ஆனால் பலரும் நகை திருட்டு பற்றி மட்டுமே புகார் கொடுத்தனர். குடும்ப கவுரவம் கருதி பாலியல் பலாத்காரத்தை மறைத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே, கொள்ளையனை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பழைய ரவுடிகளை பிடித்தும் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். இந்த சம்பவத்துக்கு முடிவுகட்ட அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன், உதவி கமிஷனர் கர்ணன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், கடந்த மாதம் ஆவடி காமராஜர் நகரில் உள்ள ஒரு வீட்டில் வாலிபர் ஒருவர் நள்ளிரவில் நுழைந்து ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் சத்தம் போட்டதால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த புகாரை போலீசார் துருப்பு சீட்டாக வைத்து விசாரணையை வேறு கோணத்தில் நடத்த துவங்கினர். பெண் பித்தன் ஒருவன்தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறான் என்ற முடிவுக்கு வந்தனர். எனவே, கொள்ளையர்களில் பெண் பித்தர்களின் பட்டியலை தயாரித்தனர்.
மேலும், பாலியல் பலாத்கார முயற்சி தொடர்பான புகார் கொடுத்ததன் அடிப்படையில் சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையனின் உருவம் பதிவாகி இருந்தது. இதனையடுத்து அந்த உருவத்தை வைத்து வாலிபரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்நிலையில், அம்பத்தூர் அடுத்த பட்டரைவாக்கம் பகுதியில் பைக்கில் வேகமாக வந்த ஒரு வாலிபரை ரோந்து போலீசார் பிடித்தனர். அவர் வைத்திருந்த பைக்கிற்கு எந்த ஆவணமும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், லலிதாம்பாள் நகர், 17வது தெருவைச் சார்ந்த அறிவழகன்(29) என்பது தெரியவந்தது.

இவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது. குற்றவாளி சொல்ல சொல்ல போலீசாரின் தலையே சுற்ற ஆரம்பித்தது. விசாரணையில் கிடைத்ததாக போலீசார் தெரிவித்த தகவல்கள்: அறிவழகனின் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம், மாத்தூர் கிராமம். திருமணம் ஆகவில்லை. எம்பிஏ படித்து விட்டு பெங்களூரில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி உள்ளார். அப்போது, அந்த பகுதிகளில் தனியாக இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களை மிரட்டியும், மயக்கமடைய செய்தும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளான். இது குறித்து போலீசாருக்கு பல புகார்கள் வந்துள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்துள்ளான். இவன் இரட்டை கதவுகளை கொண்ட ஸ்குரூக்களை சத்தமில்லாமல் எடுப்பத்தில் வல்லவன். இதற்காக ஸ்குரூ டிரைவர் எப்போதும் வைத்து இருப்பான். காலை நேரங்களில் இரட்டை கதவு மற்றும் தனியாக உள்ள வீடுகளை தேர்வு செய்வான் பிறகு நள்ளிரவில் அந்த வீடுகளின் இரட்டை கதவுகளை ஸ்குரூ டிரைவர் கொண்டு திறந்து வீட்டிற்குள் செல்வான். பெண்களின் வாயை பொத்தி தனியாக இருக்கும் அறைக்கு இழுத்து செல்வான். பெண்கள் திமிறினால் உன் குழந்தை, கணவரை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவான். அப்படியும் பணியாவிட்டால் மயக்க மருந்தை சுவாசிக்க செய்து அவர்களை தனி அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, அவர்களிடம் உள்ள நகைகளை திருடிக் கொண்டு சென்றுவிடுவான்.

 பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண்களும் தங்கள் குடும்ப எதிர்கால வாழ்க்கையை கருதி நகை திருடுபோனதாக மட்டும் குடும்பத்தினரிடம் தெரிவித்து வந்துள்ளனர். வேளச்சேரி கிண்டி, குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்களை பலாத்காரம் செய்தும், நகைகளை திருடியும் உள்ளான். சில பெண்கள் பயத்தில் சம்மதித்த உடன், அவர்களை பலாத்காரம் செய்து  தனது செல்போனில் வீடியோ எடுத்து, இதனை இணையதளத்தில் வெளியிட்டால் உங்கள் மானம் போகும் எனக்கூறி பெண்களிடம் நகை, பணத்தையும் கொள்ளை அடித்துள்ளான். இது குறித்து பல பெண்கள் போலீசாருக்கு புகார் கொடுக்க பயந்து உள்ளனர். இதில் துணிச்சலான ஒரு பெண் வேளச்சேரி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். அதன்படி, போலீசார் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் அறிவழகனை கைது செய்துள்ளனர். பின்னர் அவனை விசாரணை செய்தபோது மேற்கண்ட பகுதியில் 50க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து நகைகளை கொள்ளையடித்து இருப்பதை ஒப்புக் கொண்டுள்ளான். இதனையடுத்து, போலீசார் அவனிடம் இருந்து 50 சவரன் நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவனை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

 இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே அறிவழகன் ஜாமீனில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து வந்துள்ளான். பின்னர் அம்பத்தூர், பாடி, கொரட்டூர், ஜெ.ஜெ நகர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் 30க்கும் மேற்பட்ட பெண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொன்றுவிடுவாதாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், சில வீடுகளில் கணவர் இருக்கும்போது கூட பெண்களை பலாத்காரம் செய்து உள்ளதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஓராண்டுக்குள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 80க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். தற்போது அவனை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம் என்று போலீசார் தெரிவித்தனர்.  சென்னை, புறநகரில் வீடு புகுந்து பெண்களை பலாத்காரம் செய்த கொடூரனை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டினார்.

‘அந்த’ வீடியோக்கள் பறிமுதல்
போலீசார் அறிவழகனை கைது செய்து அவன் வசித்த வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து 80க்கும் மேற்பட்ட பலாத்கார வீடியோக்கள், 25சவரன் நகைகள், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ரகசியம் காப்போம்பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக அறிவழகன் மீது புகார் கொடுக்கலாம். புகார் கொடுக்கும் பெண்களின் விவரங்கள் அனைத்தும் ரகசியமாக வைக்கப்படும். திருட்டு வழக்கு என்றால் அவன் சில மாதங்களில் வெளியே வந்துவிடுவான். எனவே, பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவனை பல வருடங்கள் சிறையில் தள்ள முடியும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பணம், நகை பங்கு
அறிவழகன் போலீசார் பிடியில் சிக்கும்போது, இரண்டு  வழக்கறிஞர்கள் போலீசாரிடம் பேசி, அவரை தனது நெருங்கிய நண்பர் என கூறி தப்பிக்க வைத்து உள்ளனர். அந்த இரு வழக்கறிஞர்களுக்கும் அறிவழகன் கொள்ளை அடித்த நகைகளில் பங்கு கொடுத்து உள்ளான். எனவே, அந்த வழக்கறிஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

‘கரன்சி’ கட்டில்
ெகாள்ளையடித்த பணத்தை கொண்டு வாரத்துக்கு ஒருமுறை துணை நடிகைகள், அழகிகளிடம் செல்வாராம். அப்போது அந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படியே கட்டிலில் பரப்பி வைத்து அதில் அறிவழகனும் அந்த பெண்ணும் படுத்து ஜாலியாக இருப்பார்களாம். வாரத்தில் குறைந்தபட்சம் 2  நாள் மசாஜ் சென்டருக்கும், பாலியல் விடுதிக்கும் போகாவிட்டால் தூக்கமே வராது என்று போலீசாரிடம் தெரிவித்துள்ளான்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்