SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

2018-12-16@ 21:43:34

திருவனந்தபுரம்: சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்று நள்ளிரவில் முடியும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம் பெண்கள் தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து பெரும் போராட்டங்கள் வெடித்தது. தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கடந்த நவம்பர் 15 முதல் ஜனவரி 16ம் தேதி வரை 4 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தற்போது 3ம் கட்டமாக டிசம்பர் 14 முதல் 29ம் தேதி வரை 4026 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதில் ஐஜி. ஜித் தலைமையில், ஒரு டிஐஜி, 6 எஸ்பிக்கள், 29 டிஎஸ்பிக்கள், 90 இன்ஸ்பெக்டர்கள், 389 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் 230 பெண் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 4ம் கட்டமாக டிசம்பர் 29 முதல் ஜனவரி 16ம் தேதி வரை 4383 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்று சபரிமலையில் கடந்த 13-ம் தேதி மேலும் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டு, 16ம் தேதி இன்று இரவுவரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நள்ளிரவுடன் முடியும் நிலையில் இருந்த 144 தடை உத்தரவை மேலும் 2 நாட்களுக்கு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்